ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONALSELANGOR

கெடாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 95 ஆக குறைந்தது

அலோர்ஸ்டார், அக் 31- இன்று காலை 8.00 மணி நிலவரப்படி கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 95ஆக குறைந்தது. தற்போது 32 குடும்பங்கள் மட்டுமே துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ள நிலையில் நேற்று மொத்தம் 141 பேர் இங்கு அடைக்கலம் நாடியிருந்தனர்.

குபாங் பாசு மற்றும் கோத்தா ஸ்டார் ஆகிய மாவட்டங்களில் உள்ள நிவாரண மையங்களில் அவர்கள் தங்கியுள்ளதாக கெடா மாநில பொது தற்காப்பு படையின் பேரிடர் மேலாண்மைக் குழு தலைவர்  மேஜர் முகமது சுஹாய்மி முகமது ஜைய்ன் கூறினார்.

பிஞ்சாய் தேசிய பள்ளியில் கடந்த 26 ஆம் தேதி திறக்கப்பட்ட குபாங் பாசு மாவட்ட நிலையிலான துயர் துடைப்பு மையத்தில் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 26 பேர் தங்கியுள்ளனர்.

கோத்தா ஸ்டார் மாவட்டத்தின் சுக்கா மெனாந்தி தேசிய பள்ளியில் செயல்பட்டு வரும் நிவாரண மையத்தில் 25 குடுமபங்களை  சேர்ந்த 75 பேர் தங்கியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

தங்கள் கிராமங்களில் வெள்ளம் இன்னும் வடியாத காரணத்தால் இவ்விரு நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :