ECONOMYMEDIA STATEMENTNATIONAL

முன்கூட்டியே தொடங்குகிறது பருவ மழை- நவ.7 முதல் அடுத்தாண்டு மார்ச் வரை மழை காலம் தொடரும்

கோலாலம்பூர், நவ 4– மலேசியாவில் வடகிழக்கு பருவமழை முன்பு
கணித்ததை விட முன்னதாக அதாவது, இம்மாதம் 7 ஆம் தேதி முதல்
அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்காலக்கட்டத்தில் பதிவாகும் என கணிக்கப்படும் நான்கு முதல் ஆறு
பருவமழை நிகழ்வுகள் காரணமாக கனத்த மழைப் பொழிவு ஏற்படும்
சாத்தியம் உள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை கூறியது.
கடந்த பருவமழைக் காலங்களைப் போல் இம்முறையும் சில
தினங்களுக்கு தொடர்ச்சியாக மழையும் அதன் காரணமாக தாழ்வான
மற்றும் ஆற்றோரப் பகுதிகளில் வெள்ளமும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக
அது தெரிவித்தது.
தொடர்ச்சியான அடைமழையோடு கடல் பெருக்கும் ஏக காலத்தில்
ஏற்படும் பட்சத்தில் வெள்ள அபாயம் மேலும் அதிகரிப்பதற்கு சாத்தியம்
உள்ளதாக அத்துறை அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.
கடல் பெருக்கு காரணமாக தென் சீனக் கடலில் கொந்தளிப்பும் உயர்
அலைகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆகவே, பருவமழையை
எதிர்கொள்ள எந்நேரமும் தயார் நிலையில் இருக்கும் அதே வேளையில்
வானிலை தொடர்பான எச்சரிக்கைகளை ஏற்று செயல்படும்படி பொது
மக்களை அத்துறை கேட்டுக் கொண்டது.

Pengarang :