ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

கிள்ளான் வட்டாரத்தில் இன்றிரவு மோசமான வானிலை நிலவும்-  பொது மக்களுக்கு எச்சரிக்கை

ஷா ஆலம், நவ 9- கிள்ளான் மாவட்டத்தில் இன்றிரவு மோசமான வானிலை நிலவும் என்ற முன்னறிவிப்பைத் தொடர்ந்து சுற்றுப்புற சூழல் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அப்பகுதி மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இன்று மாலை 6.40 மணி முதல் கோலக் கிள்ளான் பகுதியில் கடல் நீர் 4.88 மீட்டர் அளவில் இருக்கும் என்று தேசிய ஹைட்ரோகிராஃபிக் மையம் கணித்துள்ளதாக கிள்ளான் மாவட்ட  மற்றும் நில அலுவலகம் தனது முகநூல் பதிவில் தெரிவித்தது.

கிள்ளான் மாவட்டத்தில்  பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் மாலையில் பல இடங்களில் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளது என்றும் மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

எப்பொழுதும் தயார் நிலையில் இருங்கள். சுற்றுப்புற சூழ்நிலையை அறிந்திருங்கள். பேரிடர் ஏற்படும் பட்சத்தில் கிள்ளான் மாவட்ட பேரிடர்  பிரிவிடம் இலவச தொலைபேசி இணைப்பின் மூலம் புகார் அளிக்கவும் என்று அது கூறியது.

கிள்ளான் பகுதியில் பேரழிவு ஏற்பட்டால் தொடர்பு கொள்ளக்கூடிய அவசரகால தொடர்பு எண்கள் கீழே தரப்பட்டுள்ளன.


Pengarang :