ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

கிள்ளான், ஜோஹான் செத்தியாவில் வெள்ளம்- 200 வீடுகள் பாதிப்பு

ஷா ஆலம், நவ 10 – கிள்ளானில் உள்ள கம்போங் ஜோஹான் செத்தியாவில் நேற்று மாலை ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 200 வீடுகள் பாதிக்கப்பட்டன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்பட்டதாகவும் எட்டு வீடுகளைச் சேர்ந்த 30 பேர் ஜோஹான் செத்தியா தேசிய பள்ளியில் அமைக்கப்பட்ட தற்காலிக நிவாரண மையத்திற்கு மாற்றப்பட்டதாகவும் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் நோரஸாம் காமிஸ் கூறினார்.

நீர்மட்டம் இரண்டு அடிக்கு (0.6 மீட்டர்) மேல் உயர்ந்தது தொடக்கக் கட்ட அறிக்கை வழி தெரிய வந்ததாக கூறிய அவர், எனினும் சிறிது நேரத்தில் நீர் வடியத் தொடங்கியது என்றார்.

தீயணைப்புத் துறை தவிர்த்து, காவல்துறை, தன்னார்வ தீயணைப்பு வீரர்கள், சுகாதார அமைச்சு, கிள்ளான் மாவட்ட அலுவலகம் மற்றும் ரேலா பிரிவு ஆகியவையும் மீட்பு பணியில் ஈடுபட்டன.


Pengarang :