ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

சிலாங்கூர் உள்பட ஆறு மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிப்பு

கோலாலம்பூர், நவ 21- நாட்டில் நேற்று மாலை 4.00 நிலவரப்படி சிலாங்கூர் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் உள்ள 13 மாவட்டங்கள் வெள்ளப் பிரச்சனையை எதிர்நோக்கியுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) கூறியது.

பேராக், சிலாங்கூர், மலாக்கா, ஜொகூர், கிளந்தான், சரவா ஆகியவையே பாதிக்கப்பட்ட அந்த ஆறு மாநிலங்களாகும் என்று நட்மா அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

இதுவரை 511 குடும்பங்களைச் சேர்ந்த 1,789 பேர் 28 வெள்ள துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  நேற்று காலை 8.00 மணியளவில் இந்த எண்ணிக்கை 691 குடும்பங்களைச் சேர்ந்த 2,530 பேராக இருந்தது என்று அது குறிப்பிட்டது.

வெள்ளம் தணிந்த காரணத்தால் கிளந்தான் மாநிலத்தின் பாசீர் மாஸ், சிலாங்கூர் மாநிலத்தில் டேவான் பாகான் நக்கோடா ஓமார், டேவான் ஹாலா சாரா பாரு ஆகிய துயர் துடைப்பு மையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனிடையே, நேற்று மாலை 4.00 மணி நிலவரப்படி உலு சிலாங்கூரிலுள்ள சுங்கை பெர்ணம் உள்பட நாட்டிலுள்ள நான்கு ஆறுகள் அபாயக் கட்டத்தில் உள்ளதாகவும் நட்மா தெரிவித்துள்ளது.

இது தவிர்த்து சிலாங்கூர் மாநிலத்திலுள்ள ரந்தாவ் பாஞ்சாங்கில் உள்ள சுங்கை சிலாங்கூர், சுங்கை சாங்காங் பகுதியிலுள்ள சுங்கை லங்காட் ஆகியவை எச்சரிக்கை கட்டத்தை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Pengarang :