ALAM SEKITAR & CUACAECONOMYPBT

எம்.பி.எஸ் சிப்பாங் `டெர்மினல்-டெங்கில்` எனும் பேருந்து நிலையத்தை புது பொலிவுடன் மறு நிர்மானிக்கும்  திட்டம்

சிப்பாங் நவ 23  ; –எம்.பி.எஸ் சிப்பாங் `டெர்மினல்-டெங்கில்` எனும் பேருந்து நிலையத்தை புது பொலிவுடன் மறு நிர்மானிக்கும்  திட்டம்ஷா ஆலம், நவ 23; எம்.பி.எஸ் .சிப்பாங் டெங்கில் வணிக தளத்தில் 20 மில்லியன் மதிப்புள்ள டெர்மினல்-டெங்கில் எனும் பெயரில் ஒரு புதிய தோற்றம் கொண்ட பேருந்து நிலையத்தை நிறுவத் திட்டமிட்டுள்ளது.

அங்குள்ள வணிகத் தளம் இத்திட்டத்திற்காக தகர்க்கப்படும்  என்றும் பேருந்து நிலையம் அமைக்கும் பணி அடுத்த ஆண்டு மத்தியில் தொடங்கப்படும் என்று சிப்பாங்  நகராண்மைக் கழக தலைவர்  தெரிவித்தார்.

இருப்பினும், தங்கள் குழுவினர் இன்னும் அதற்கான வடிவமைப்பை முடிவு செய்யவில்லை மேலும் அத் திட்டத்திற்கான டெண்டரும் வெளியிடவில்லை என்று டத்தோ அப்துல் ஹமீட் ஹூசைன் கூறினார்.

பேருந்து நிலையத்தை பரந்த நிலப்பரப்பில் அமைக்க அவ்விடத்தின் அருகில் உள்ள நிலத்தையும் பெறுவதற்கு நாங்கள் இன்னும் சிப்பாங் மாவட்ட நில அலுவலகத்துடன் விவாதித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

அங்குள்ள உணவு தளமும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள்  பழமையானது; ஆகையால் அதையும் மேம்படுத்த உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வணிகர்களின் புகார்களைத் தான் அறிந்திருப்பதாகவும் ஆனால், எம்.பி.எஸ் சி பாங்கின் கொள்கையானது வணிகர்கள் கடைகளை 10 ஆண்டுகள் வரை தான் வாடகைக்கு எடுக்க முடியும் என்ற வரம்பை நிர்ணயித்துள்ள தாகவும் அவர் குறிப்பிட்டார்.

வணிகர்களுக்கு இவ்விஷயம் அறிவிக்கப்பட்டுள்ளது; மற்ற வர்த்தகர்களுக்கு வணிகம் செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இவ் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வணிக தளத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வியாபாரம் செய்து வரும் ஐந்து வியாபாரிகள் உள்ளதால், அவர்களை காலி செய்ய நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.


Pengarang :