ECONOMYSELANGOR

இன்று ஒன்பது இடங்களில் அத்தியாவசிய பொருட்கள் மலிவு விற்பனை

ஷா ஆலம், நவ 24 – மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள அத்தியாவசியமான பொருட்கள் மலிவாக விற்கும் முயற்சி இன்று காலை மணி 10 முதல் மதியம் 1 வரை ஒன்பது இடங்களில் தொடர்கிறது.

அவ்விடங்கள் டத்தாரான் தொங்காக் 9 சுங்கை புசார் (சுங்கை பஞ்சாங் சட்டமன்றம்) , கம்போங் திரம் செத்தியா (பெர்மாத்தாங் சட்டமன்றம்), சூராவ் அல் வஹலா கோத்தா புத்ரி (ரவாங் சட்டமன்றம்), டாஹ்லியா ஏ (டெம்லர் சட்டமன்றம்),  ஜாலான் நிர்வாண 14, தாமான் நிர்வாண (பண்டான் இன்டா சட்டமன்றம்), டேசா பைடுரி (பாலாகோங் சட்டமன்றம்), பஜார் USJ7 (சுபாங் ஜெயா சட்டமன்றம்), கம்போங் குபு காஜா (பாயா ஜாராஸ் சட்டமன்றம்) மற்றும் பங்சாபுரி அமான் (ஶ்ரீ செர்டாங் சட்டமன்றம்).

அத்திட்டத்தில் கோழி RM10, புதிய திடமான மாட்டி இறைச்சி (ஒரு பேக் RM10), மற்றும் முட்டைகள் (ஒரு பலகை RM10) என விற்கப்படுகிறது. சிலாங்கூர் விவசாய வளர்ச்சிக் கழகம் (பிகேபிஎஸ்) கானாங்கெளுத்தி மற்றும் செலாயாங் மீன்களை RM6க்கும், 5 கிலோ சமையல் எண்ணெய் RM25க்கும் 5 கிலோ அரிசியை RM10க்கும் விற்கிறது.

56 சட்டமன்றங்களை உள்ளடக்கிய இத்திட்டம் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 6ஆம் தேதி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மக்களின் ஆதரவைத் தொடர்ந்து இம்முயற்சி அடுத்த ஆண்டு மார்ச் வரை தொடரும் என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்.


Pengarang :