Dato’ Menteri Besar Dato’ Seri Amirudin Shari ketika menjawab soalan dalam sidang Dewan Negeri Selangor (DNS) di Bangunan Annex pada 26 Ogos 2021. Foto NAZIR KHAIRI
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

வறட்சி முன்னறிவிப்பு: நீர் ஆதாரங்களை முன்கூட்டியே நிர்வகிக்கவும், நீர்த்தேக்கங்களை மேம்படுத்தவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

ஷா ஆலம், நவ 23; 2025ஆம் ஆண்டில் ஏற்படவிருக்கும் நீண்ட கால வறட்சியை எதிர்கொள்ள மாநிலத்தின் முதல் கட்ட நடவடிக்கையாக மொத்தம் 21 குளங்கள் மேம்படுத்தப்படவுள்ளன என்று பொதுவுடமை பாதுகாப்பு குழு தெரிவித்தது.

ஸ்கிம் (SJAM) கீழ் இரண்டு மாதங்களுக்கு நீரை சேமிக்க முடியும் என எதிர்பார்க்கப்படும் குளங்களின் கொள்ளளவை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக ஐ.ஆர் ஹிசாம் கூறினார்.

14 மில்லியன் கன மீட்டர் கொள்ளளவு கொண்ட குளங்கள் 21 மில்லியன் கன மீட்டர் கொள்ளளவு கொண்டவையாக மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (லுவாஸ்) 20 முன்னாள் சுரங்களாக இருந்தது என அறிவிக்கப்பட்ட வையும் மேலும் 78 கூடுதல் குளங்களையும் அடையாளம் கண்டுள்ளது. இந்த 98 குளங்களில் 21 குளங்களை எஸ்.ஜே.எம் கீழ் மேம்படுத்த மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையின் (ஜே.பி.எஸ்) கீழ் நீர்த்தேக்கங்களாக உள்ள 127 குளங்கள் இரட்டை நோக்கங்களுக்காக அதாவது வெள்ள நீர்த்தேக்கங்களாவும் வறட்சி காலங்களில் நீரை சேமிக்கும் இடமாகவும் செயல்பட முடியுமா என ஆராயப்படும் என இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்ற அமர்வில் அறிவித்தார்.

2025 இல் எதிர்பார்க்கப்படும் நீண்ட வறட்சியை சமாளிக்க மாநில அரசின் செயல் திட்டம் குறித்து சுபாங் ஜெயா பிரதிநிதி மிச்செல் என்ஜி மேய் ஸ்ஸெ கேட்டக் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

இதற்கிடையில், வறட்சியைப் பற்றியத் தகவலை அறிய http://infokemarau.water.gov.my எனும் இணையத்தளம் உருவாகப்பட்டுள்ளது. இதில் அணையின் தற்போதைய நிலை, வெளியேற்ற விகிதம் மற்றும் நாடு முழுவதும் உள்ள நீர் நிலையங்களின் மழைப்பொழிவை காட்டுகிறது.

ஜே.பி.எஸ் வறட்சி குறித்த செயல்திட்டத்தை உருவாகும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது வறட்சிக்கு முன், போது மற்றும் அதற்குப் பிறகு எனும் முழுமையான இயக்க நடைமுறைகள் உள்ளடக்கியது என அவர் தெரிவித்தார்.


Pengarang :