ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

மூன்று மாநிலங்களில் வெள்ளப் பாதிப்பு; 952 பேர் தற்காலிக தங்குமிடத்தில் தஞ்சம்

 கோலாலம்பூர், நவ 24 – இன்று பிற்பகல் மணி 4 நிலவரப்படி, மூன்று மாநிலங்களில் உள்ள ஏழு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 952 பேர் இன்னும் 19 தற்காலிக தங்குமிடங்களில் உள்ளனர்.

அவ்வெள்ளத்தால் பேராக்கில் நான்கு மாவட்டங்களும் சிலாங்கூரில் இரண்டு மாவட்டங்களும் ஜோகூரில் ஒரு மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (NADMA) வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்தது.

இன்று காலை மணி 8 வரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிகத் தங்குமிடங்களில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,156 இறந்துள்ளதாகவும் தற்போது அந்த எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அவ்வறிக்கை காட்டுகிறது. மேலும், பேராக்கில் ஒரு தற்காலிகத் தங்குமிடத்தில் (அலோர் போங்சு, கெரியான் தேசியப் பள்ளி) மூடப்பட்டதாக நட்மா தெரிவித்துள்ளது.

லொங் தெரு, மிரி (சரவாக்), ஜம்பதான் பாடாங் குடாங்சாவில் உள்ள சுங்கை செர்திங், பெஹராவில் உள்ள சுங்கை திரியாங் (பகாங்), பூலோ காசாபில் உள்ள சுங்கை மூவார் (ஜோகூர்), ருமா பம் பண்டார் பாருவில் உள்ள சுங்கை கெரியான், கம்போங் பெருபோக் யானில் உள்ள சுங்கை கூரோன் (கெடா) ஆகிய ஆறுகள் எச்சரிக்கும் வண்ணம் உள்ளதாக நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (ஜே.பி.எஸ்) தன் கருத்தை கூறியது.

மாலை மணி 4 அளவில் ஜோகூர், கிளந்தான், நெகிரி செம்பிலான், பகாங், பினாங்கு, சிலாங்கூர் மற்றும் சரவாக் ஆகிய இடங்கள் தயார் நிலையில் இருக்கும்படி வெள்ள அபாய முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை மையத்திலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டதாக நட்மா தெரிவித்தது.

மேலும், பொதுப்பணித்துறையினர் இரண்டு இடங்களில் வெள்ளம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் உள்ளதாகவும் ஏழு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளதாகவும், இரண்டு இடங்களில் சாலைகள் நீரால் சூழப்பட்டுள்ளதாகவும் மற்றும் இரண்டு இடங்களில் பாலங்கள் உடைந்தும் பழுதாகியும் உள்ளன என பதிவு செய்துள்ளனர்.

இச்சம்பவங்கள் கெடாவில் நான்கு மாவட்டங்களிலும் ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலானில் தலா இரண்டு மாவட்டங்களிலும் பேராக், சிலாங்கூர், கிளந்தான், திரங்கானு மற்றும் பகாங்கில் தலா ஒரு மாவட்டத்திலும் நிகழ்ந்துள்ளன.


Pengarang :