ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONAL

பாடாங் செராய் மற்றும்  தியோமனில் முதல் கட்ட வாக்களிப்பு

கோலாலம்பூர், டிச.3 – கெடாவில் உள்ள பாடாங் செராய் நாடாளுமன்றத் தேர்தலிலும், பகாங்கில் உள்ள தியோமன் மாநிலத் தொகுதியிலும் முதற்கட்ட வாக்காளர்களாகப் பதிவு செய்த 319 காவல்துறையினர் இன்று வாக்களித்தனர்.

தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, 76 காவல் துறையினர் கூலிம் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் பல்நோக்கு மண்டபத்தில் காலை மணி 8 முதல் பிற்பகல் மணி 2 வரை பாடாங் செராய் தொகுதியில் வாக்களித்துள்ளனர்

இதற்கிடையில், 243 காவலர்கள் ரோம்பின் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் காலை மணி 8 முதல் மாலை மணி 5 வரையிலும், புலாவ் தியோமன் டெகெக் காவல் நிலைய தகவல் அறையில் காலை 8 மணி முதல் நண்பகல் வரையிலும் வாக்களித்து  கடமையை   நிறைவேற்றினர்.

பாடாங் செராய் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பானின் எம். கருப்பையா மற்றும் டியோமன் தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) எம்டி யூனுஸ் ரம்லி ஆகியோர் இறந்ததைத் தொடர்ந்து இரு பகுதிகளிலும் தேர்தல் டிசம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. .

கருப்பையா (69), நவம்பர் 16 அன்று மாரடைப்பு மற்றும் உடல்நலக் கோளாறு காரணமாக இறந்தார், அதே நேரத்தில் எம்.டி யூனுஸ் (61) நவம்பர் 19 அன்று வாக்குப்பதிவு நாளுக்கு பல மணி நேரத்திற்கு முன்பு இறந்தார்.

இத்தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நவம்பர் 24 அன்று நடைபெற்றது, இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வேளையில், டிசம்பர் 7ஆம் தேதி அடுத்த கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெர்னாமா


Pengarang :