ALAM SEKITAR & CUACAECONOMYPENDIDIKAN

2023 பட்ஜெட் திட்டங்களை மக்களிடம் அறிமுகப்படுத்தும் பணி ஜனவரியில் தொடங்கப்படும்

உலு சிலாங்கூர், டிச 4- சிலாங்கூர் அரசின் 2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இடம் பெற்றுள்ள திட்டங்களை மக்களிடம் அறிமுகப்படுத்துவதற்காக மாநில அரசு அடுத்தாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை அனைத்து தொகுதிகளிலும் பயணத் தொடரை மேற்கொள்ளவுள்ளது.

இந்த பயணத் தொடர் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தை விட சிறிய அளவில் அமைந்திருக்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த பயணத் தொடர் அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கியிருக்கும். இத்திட்டத்தை சட்டமன்ற அளவில் அல்லது நாடாளுமன்ற அளவில் மேற்கொள்வதா என்பதை என்பதை நாங்கள் முடிவு செய்வோம் என அவர் தெரிவித்தார்.

இன்று இங்கு உலு சிலாங்கூர் மாவட்ட நிலையிலான ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தை தொடக்க வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

இந்த ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தை மாநில அரக கடந்த ஜூன் மாதம் உலு லங்காட், தாமான் கோசாசில் தொடக்கியது. அதன் பின்னர் இந்நிகழ்வு கோல லங்காட், பந்தாய் மோரிப்பிலும் கோல சிலாங்கூர் ஸ்டேடியம் உத்தாமாவிலும் நடத்ப்பட்டது.

அடுத்தாண்டு ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்வதற்காக மாநில அரசு 245 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாக கடந்த மாதம் 25ஆம் தேதி 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அமிருடிடின கூறியிருந்தார்.


Pengarang :