ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

கோவிட்-19 இன்னும் உயிருக்கு ஆபத்தானது, நோய்க்கு அறுவர் மரணம்

ஷா ஆலம், டிச 4- நாட்டில் நேற்று 1,866 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்ட வேளையில் அறுவர் இந்நோய்க்கு பலியாகினர்.

நேற்றைய தொற்றுகளில் 1,860 உள்நாட்டிலும் எஞ்சிய ஆறு சம்பவங்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் மூலமாகவும் பரவியதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

நேற்று பதிவான தொற்றுகளுடன் சேர்ந்து நாட்டில் இதுவரை கோவிட்-19 நோய்க்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 49 லட்சத்து 98 ஆயிரத்து 830 ஆக உயர்ந்துள்ளது.

நோய்த் தொற்று கண்ட மாநிலங்கள் பட்டியலில் 634 சம்பவங்களுடன் சிலாங்கூர் முதலிடத்திலும் 186 சம்பவங்களுடன் கோலாலம்பூர் இரண்டாவது இடத்திலும் 176 சம்பவங்களுடன் சரவாக் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

நேற்று, கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து 2,814 பேர் குணமடைந்தனர். இதனுடன் சேர்த்து இந்நோயிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 49 லட்சத்து 39 ஆயிரத்து 021 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் இப்போது தீவிரமாக உள்ள கோவிட்-19 நோய்த் தொற்றுகளின் எண்ணிக்கை 23,099 ஆகும். தீவிர நோய்த் தாக்கம் கொண்டவர்களில் 21,422 பேர் (92.7 விழுக்காடு) வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் 1,575 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய 6 புதிய மரணச் சம்பவங்கள் நேற்று பதிவாகின. இதனுடன் சேர்த்து இந்நோய்த் தொற்றினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 36,710 ஆக உயர்ந்துள்ளது.


Pengarang :