ALAM SEKITAR & CUACAECONOMYPBT

மறுசுழற்சி மையம் மொத்த குப்பையில் ஐந்து சதவீதம் குறைக்க முடியும்

ஷா ஆலம், டிச 9: சிலாங்கூரில் இன்னும் செயல்படும் நூற்றுக்கணக்கான மறுசுழற்சி மையங்களால் மொத்தக் குப்பையில் ஐந்து சதவீதத்தைக் குறைக்க முடிகிறது.

சுற்றுச்சூழல் எஸ்கோ ஹீ லாய் சியான் கூறுகையில், மறுசுழற்சி முறை ஒரு புதிய விஷயம் இல்லை என்றாலும், அதை அன்றாட வாழ்வில் கடைப் பிடித்தால் பல நன்மைகள் உண்டு என்றார்.

“சிலாங்கூரில் மட்டும் 250 மறுசுழற்சி மையங்கள் இன்னும் தீவிரமாக இயங்கி வருகின்றன, “மறுசுழற்சி மையம் இருப்பதன் மூலம் மொத்த குப்பையில் ஐந்து சதவீதத்தை குறைக்கலாம், கழிவுகளை அகற்றும் செலவை மிச்சப்படுத்தலாம், கழிவு குவியல்களை தவிர்க்கலாம் மற்றும் மறு சுழற்சியின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்,” என்றார் அவர்.

நேற்று இங்கு பிரிவு U13யில் உள்ள புதிய மறுசுழற்சி மையத்தை அதிகாரப்பூர்வமாக திறந்த வைத்த பின் அவர் இவ்வாறு கூறினார்.

“மறுசுழற்சி திட்டம் வெற்றி பெறச் சமூகம் உட்பட அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. மாநில அரசு அதற்கான இடத்தை ஏற்பாடு செய்து கொடுக்கிறது, ஆனால் பொருள்களைச் சேகரிப்பது குடியிருப்பாளர்களின் கையில்தான் உள்ளது.

தற்போதுள்ள மறுசுழற்சி மையங்கள் போதுமானதாக இல்லை, குறிப்பாக பாதி நகரப்புறமாக இருக்கும் இடங்களில் அவற்றை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம், என்றார்.


Pengarang :