NATIONAL

வீடு வாங்குவதற்கு முன் பணம் செலுத்தும் பிரச்சனையைத் தீர்க்கும் திட்டம்

ஷா ஆலம், டிசம்பர் 21: மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட வீட்டுக் கடன் நிதியானது சிலாங்கூரில் மக்கள் தங்கள் முதல் வீட்டை வாங்குவதை எளிதாக்குகிறது.

டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, RM100 மில்லியன் ஒதுக்கீட்டுடன் இத்திட்டத்தை அறிமுகப் படுத்தியதன் வழி சிலாங்கூர் மக்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் முன் பணம் செலுத்தும் பிரச்சனை தீர்க்க உதவுகிறது.

“இந்த திட்டம் முதல் முறையாக வீட்டை வாங்குவதற்கு பெரும்பாலும் முட்டுக்கட்டையாக இருக்கும் முன் பணம் செலுத்தும் சிக்கலை தீர்க்கும்,” என்று அவர் இன்று முகநூலில் ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்தார்.

அவர் கடந்த மாதம் 2023 பட்ஜெட்டை சமர்ப்பித்த போது, மாநிலத்தில் அதிகமான மக்கள் சொந்த வீடுகள் வாங்க உதவுவதற்காக இத்திட்டத்தை அறிவித்தார்.

10 முதல் 15 சதவிகிதம் வரை முன்பணமாக வழங்கும் இத்திட்டத்தின் வழி சுமார் 4,000 விண்ணப்பதாரர்கள் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதலாக, மாதாந்திர கொடுப்பனவுகள் ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை சுமையாக இருக்காது மற்றும் நீங்கள் முன்கூட்டியே பணத்தைத் திருப்பிச் செலுத்தும் அம்சங்களும் உண்டு.


Pengarang :