ECONOMYPBT

அடுத்தாண்டு முதல் உணவு விற்பனை செய்வோர் கட்டாயம் முகக் கவரி அணிய வேண்டும்- எம்.பி.கே.ஜே. உத்தரவு

ஷா ஆலம், டிச 24- உணவக மற்றும் அங்காடி  நடத்துநர்கள் கட்டாயம் முகக் கவரி அணியும் நடைமுறையை காஜாங் நகராண்மைக் கழகம் அடுத்தாண்டில் அமல்படுத்தவுள்ளது.

இந்த உத்தரவு முறையாக அமல்படுத்தப் படுவதை உறுதி செய்யும் பணியில் அமலாக்கத் துறை, நகர சேவைத் துறை மற்றும் சுகாதாரத் துறைகளின் ஒத்துழைப்போடு லைசென்ஸ் மற்றும் அங்காடி வியாபாரத்  துறை ஈடுபடும் என்று நகராண்மைக் கழகத் தலைவர் நஜ்முடின் ஜெமாய்ன் கூறினார்.

சிலாங்கூரில் சமையல் மற்றும் உணவு அல்லது பானங்களைக் கையாளும் பணியில் ஈடுபடுவோர் முகக் கவரி அணிவதை கட்டாயமாக்கும் உத்தரவை மாநில ஆட்சிக்குழு கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி பிறப்பித்தது. இதன் அடிப்படையில் இந்த உத்தரவு பின்பற்றப்படும் படி லைசென்ஸ் மற்றும் அங்காடி வியாபாரத் துறை உணவகங்களைப் பணித்துள்ளது என்றார் அவர்.

சுத்தத்தை பேணும் முயற்சியாக சமையலில் ஈடுபடுவோர் மற்றும் உணவு, பானங்களை கையாள்பவர் முகக் கவரி அணிவதை வழக்கப் படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

இந்த உத்தரவை மீறுவோருக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.


Pengarang :