ALAM SEKITAR & CUACAECONOMY

பத்தாங் காலி நிலச்சரிவு- உடைமைகள் காணாமல் போனது தொடர்பில் இரு புகார்கள்

ஷா ஆலம், ஜன 2- தங்களின் உடைமைகள் காணாமல் போனது தொடர்பில் பத்தாங் காலி-கெந்திங் சாலையில் உள்ள ஃபாதர்ஸ் ஆர்கானிக் ஃபார்ம் பொழுதுபோக்கு முகாம் பகுதியில் கடந்த மாதம் 16ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட இருவரிடமிருந்து தாங்கள் புகாரைப் பெற்றுள்ளதாக போலீசார் கூறினர்.

இவ்விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் என நம்ப்படும் தரப்பினர் பேஸ்புக் வாயிலாக வெளியிட்ட பதிவு ஒன்று தங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் சுபியான் அப்துல்லா தெரிவித்தார்.

தங்களுக்குச் சொந்தமான டச் அண்ட் கோ அட்டையை பொறுப்பற்ற நபர்கள் பயன்படுத்தியுள்ளதாக அக்குடும்பத்தினர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளனர் என்று அவர் சொன்னார்.

அந்த சமூக ஊடகப் பதிவு தொடர்பில் இரு புகார்களை நேற்று பிற்பகல் 2.47 மணியளவில் நாங்கள் பெற்றுள்ளோம் என அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

இந்த புகாரைத் தொடர்ந்து திருட்டு தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 379வது பிரிவின் கீழ் தாங்கள் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளதாக அவர் கூறினார்.

இவ்விவகாரத்தில் பொது மக்கள் பொறுமை காக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட அவர், தங்கள் பொருள்கள் காணாமல் போனது தொடர்பில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் போலீசில் புகார் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்த மாதம்  16ஆம் தேதி நிகழ்ந்த இந்நிலச்சரிவு சம்பவத்தில் 31 பேர் பேர் பலியானதோடு மேலும் 61 பேர் காப்பாற்றப்பட்டனர். உயிரிழந்தவர்களில் 12 பேர் சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :