ECONOMYPENDIDIKAN

வாலிபால் விளையாட்டாளர்களை அறைந்த சம்பவம்- பயிற்சியாளர் இடை நீக்கம்

கோலாலம்பூர், ஜன 2- வாலிபால் எனப்படும் கைப்பந்து
விளையாட்டாளர்கள் இருவரை அறைந்ததாக கூறப்படும் பயிற்சியாளர்
விசாரணை முடியும் வரை தேசிய வாலிபால் விளையாட்டு தொடர்பான
நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக தமது தரப்பு
உடனடியாக விசாரணைக் குழு ஒன்றை அமைந்துள்ளதாக மலேசிய
வாலிபால் சங்கம் (மாவா) அறிக்கை ஒன்றில் கூறியது.
எந்த தரப்பினர் மீதும் யாரும் பலாத்காரத்தைப் பயன்படுத்துவதை சங்கம்
ஒருபோதும் அனுமதிக்காது என்பதோடு சங்க விதிமுறைகளுக்கேற்ப
சம்பந்தப்பட்டத் தரப்பினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அது
தெரிவித்தது.
வாலிபால் பயிற்றுநர் ஒருவர் இளம் விளையாட்டாளர்களை கன்னத்தில்
அறையும் காட்சி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது. இச்சம்பவம்
கடந்த மாதம் 14 முத 16ஆம் தேதி வரை ஜோகூர் மாநிலத்தின் கோத்தா
திங்கியில் நடைபெற்ற 14 வயதுக்கும் கீழ்ப்பட்ட வாலிபால் போட்டியின்
போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, இவ்விவகாரம் குறித்து கருத்துரைத்த கல்வியமைச்சர்
ஃபாட்லினா சீடேக், இவ்விவகாரத்தில் அமைச்சு ஒரு போதும் விட்டுக்
கொடுக்கும் போக்கை கடைபிடிக்காது எனக் கூறினார். அந்த பயிற்றுநரின்
அச்செயல்  தொடர்பில் அமைச்சு நிலையில் விசாரணை மேற்கொள்ளப்படும்
என்றும் அவர் தெரிவித்தார்.
பள்ளி அனைத்து மாணவர்களுக்கும் பாதுகாப்பான இடமாக இருப்பதை
உறுதி செய்வது அமைச்சின் தலையாய கோட்பாடாக விளங்குகிறது என்று
அவர் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டார்.

Pengarang :