ECONOMYPBT

விஸ்மா ஜாக்கெல் தீவிபத்து தொடர்பில் ஆருடங்களை வெளியிடாதீர்- போலீஸ் அறிவுறுத்து

ஷா ஆலம், ஜன 2- இங்குள்ள செக்சன் 7 இல் உள்ள விஸ்மா ஜாக்கெல் ஜவுளி பேரங்காடியில் நேற்று காலை ஏற்பட்ட தீவிபத்து தொடர்பில் ஆருங்டங்களை வெளியிட வேண்டாம் என பொது மக்களுக்கு  காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

அந்த தீவிபத்துக்கான காரணத்தைக் கண்டறிய சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் கூறினார்.

ஆகவே, இந்த சம்பவம் தொடர்பில் ஆருடங்களை அல்லது யூகங்களை வெளியிட வேண்டாம் என வலைத் தளவாசிகளை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

இந்த சம்பத்தினால் பெரும் இழப்பை எதிர்நோக்கியுள்ள அதன் முதலாளிகள் மற்றும் வேலை இழந்த பணியாளர்களின் நிலை குறித்து நாம் பரிவு கொள்ள வேண்டும் என்றார் அவர்.

அந்த பிரசித்தி பெற்ற ஜவுளியகம் ஏற்பட்ட தீச்சம்பவம்  வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டதாகும் என்று சமூக ஊடகங்களில் சில தரப்பினர் செய்தி பரப்பி வருவது தொடர்பில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

அந்த ஜவுளியகம் வேண்டுமென்றே தீயிடப்பட்டதாகக் கூறிய இதுவரை யாரும் போலீசில் புகார் செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்த ஜவுளியகம் வேண்டுமென்றே தீயிடப்பட்டது என்பது தீயணைப்புத் துறையின் விசாரணையில் தெரிய வந்தால் அதன் உரிமையாளர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

நேற்று காலை 7.08 மணியளவில் ஏற்பட்ட அத்தீவிபத்தில் ஐந்து மாடிகளைக் கொண்ட அந்த ஜவுளியகத்தின் 80 விழுக்காட்டு பகுதி அழிந்தது.


Pengarang :