ECONOMYMEDIA STATEMENT

பத்தாங் காலி நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவரின் பொருள்கள் களவு- அரசு ஊழியர் கைது

கோலாலம்பூர், ஜன 7- பத்தாங் காலி நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவருக்குச் சொந்தமான பொருட்களைத் திருடிய சந்தேகத்தின் பேரில் அரசு ஊழியர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த 27 வயது நபர் நேற்று கிள்ளான் பள்ளத்தாக்கில் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநில இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ எஸ்.சசிகலா தேவி கூறினார்.

திருட்டுக் குற்றம் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 379வது பிரிவின் கீழ் அவ்வாடவரை விசாரணைக்காக தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற அனுமதியை போலீசார் இன்று பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.

நிலச்சரிவு நிகழ்நத இடத்தில் காணாமல் போனதாக நம்பப்படும் பொருள்கள் கைது செய்யப்பட்ட அந்த ஆடவரிடமிருந்து கைப்பற்றப் பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

நிலச்சரிவில் சிக்கியவருக்குச் சொந்தமான ” தச் அண்ட் கோ” அட்டையை பொறுப்பற்ற நபர்கள் பயன்படுத்தியதாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதை தமது தரப்பு இதுகுறித்து அறியவந்துள்ளதாக  உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரின்டெண்டன்ட்  சுபியான் அப்துல்லா முன்னதாக கூறியிருந்தார்.

கெந்திங்-பத்தாங் காலி சாலையில் கடந்த மாதம் 16ஆம் தேதி அதிகாலையில் நிகழ்ந்த இந்த நிலச்சரிவு சம்பவத்தில் 31 பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மேலும் 61 பேர் உயிர்த்தப்பினர். 


Pengarang :