ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் வருமானம் 28.2 கோடி வெள்ளியாக அதிகரிப்பு

கிள்ளான், ஜன 31- கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் கடந்தாண்டு வருமானம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகரித்து 28 கோடியே 24 லட்சம் வெள்ளியாக உயர்ந்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு பதிவான வருமானம் 25 கோடியே 74 லட்சம் வெள்ளியாகும்  என்று கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் தலைவர் நோராய்னி ரோஸ்லான் கூறினார்.

கடந்த 2022 ஆம் ஆண்டிற்கான கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் வருமானம் 28 கோடியே 24 லட்சம் வெள்ளியாகும். வருடாந்திர பட்ஜெட் தொகையான 25 கோடியே 58 லட்சம் வெள்ளியை விட இது 109 விழுக்காடாகும் என்று அவர் சொன்னார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை நகராண்மைக் கழகத்தின் வருமானம் 25 கோடியே 74 லட்சம் வெள்ளியாக இருந்தது. 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இதன் வருமானம் 10 விழுக்காடு அல்லது 2 கோடியே 48 லட்சம் வெள்ளி உயர்வு கண்டுள்ளது என்றார் அவர்.

இன்று இங்கு நடைபெற்ற கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான முதலாவது கூட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த 2021 டிசம்பர் 31 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் நகராண்மைக் கழகத்தின்  செலவினம் 23 கோடியே 93 லட்சம் வெள்ளியாக இருந்த வேளையில் கடந்தாண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை செலவினத் தொகை 3 விழுக்காடு அல்லது 73 லட்சம் வெள்ளி அதிகரித்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :