ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சுங்கை துவா மாநிலச் சட்டமன்றம் பள்ளிகளுடன் இணைந்து பள்ளிக்கு திரும்பும் நிதி உதவியைச் செயல்படுத்தும்

ஷா ஆலம், பிப் 3: சுங்கை துவா மாநிலச் சட்டமன்றச் (DUN) சேவை மையம், சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு) அல்லது எம்பிஐ  ஏற்பாடு செய்த  உதவிகளை, செயல்படுத்த பள்ளிகளுடன் இணைந்து   செயல்படும்.

டத்தோ மந்திரி புசார் அரசியல் செயலாளர் ஏ ரஹீம் காஸ்டி, ”மீண்டும் பள்ளிக்கு  செல்வோம் ”  உதவி திட்டத்தால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் (B40) RM100 மதிப்புள்ள நன்கொடைகளை பெறுவதை உறுதி செய்ய முடியும் என்றார்.

“இலக்குக் குழுவை அடைய எங்களுக்கு உதவி தேவை. மேலும், சிரமப்படும் மாணவர்களுக்கு உதவுதல் உறுதி செய்வதற்காக, கிராமத் தலைவர்கள் மற்றும் நகராண்மை கழக உறுப்பினர்களிடமிருந்து பெறும் மாணவர்களின் தகவல்களையும் நாங்கள் ஆய்வு செய்கிறோம்.

“இதுவரை, நாங்கள் தகுதியான 300 மாணவர்களை அடையாளம் கண்டுள்ளோம். மார்ச் மாதம் பள்ளி திறக்கும் முன் அவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய இம்மாத இறுதியில் நிதி உதவி வழங்கப்படும்,” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

இந்த ஆண்டு, பள்ளித் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் B40 குடும்பங்களின் சுமையைக் குறைக்க ஒவ்வொரு மாநிலச் சட்டமன்றத்துக்கும் எம்பிஐ RM30,000 ஒதுக்கீடு வழங்குகிறது.

கடந்த வாரம், சுங்கை துவாவின் பிரதிநிதியான டத்தோ மந்திரி புசார், 2016 இல் பிறந்த குழந்தைகளுக்குத் தாபோங் வாரிசான் அனாக் சிலாங்கூர் (தவாஸ்) திட்டத்தின் மூலம் 1,212 உறுப்பினர்களுக்கு ஆரம்பப் பள்ளிக்கான உதவியை வழங்கினார்.


Pengarang :