ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மாநில அரசின் மலிவு விற்பனை, மத்திய அரசின் ரஹ்மா விற்பனை ஒருங்கிணைக்கப்படும்- மந்திரி புசார்

பெட்டாலிங் ஜெயா, ஜன 4– மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் தற்போது அமல் செய்யப்பட்டு வரும் ஜெலாஜா ஏசான் ராக்யாட் 2.0 மலிவு விற்பனைத் திட்டம் மற்றும் மத்திய அரசின் ரஹ்மா விற்பனைத் திட்டம் ஆகியவை ஒருங்கிணைக்கப்படும்.

தங்களுக்குத் தேவையான பொருளட்களை அதிக அளவிலான மக்கள் வாங்குவதற்கு ஏதுவாக அத்தியாவசிய உணவுப் பொருள் மலிவு விற்பனை நடைபெறும் இடங்கள் அதிகரிக்கப்படும் என்று அவர் சொன்னார்.

ரஹ்மா விற்பனைத் திட்டத்தை மாநில அரசு வரவேற்கிறது. இந்த விற்பனையுடன் அத்தியாவசிய உணவுப் பொருள் விற்பனையையும் ஒருங்கிணைப்பது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

ஒன்றாக நடத்த முடியாத பட்சத்தில் அவற்றை தனித்தனியாக பிரிப்போம். இதன் மூலம் அதிக இடங்களில் மேலும் அதிக எண்ணிக்கையிலானோர் பயன் பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்றார் அவர்.

மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் துணை நிறுவன கல்வி உபகாரச் சம்பளம் பெறுவோருடன் நடத்தப்பட்ட விருந்து நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்தியாவசிய உணவுப் பொருள்களை மலிவான விலையில் விற்க வகை செய்யும் இந்த ரஹ்மா விற்பனைத் திட்டத்தை உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு ஏற்று நடத்தி வருகிறது.

அதே சமயம் சிலாங்கூர் மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் மாநில அரசு மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் மலிவு விற்பனைத் திட்டத்தை கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் மூன்று மாதங்களுக்கு நடத்துகிறது.


Pengarang :