ALAM SEKITAR & CUACA

ரிக்டர் அளவில் 7.9ஆகப் பதிவான நிலநடுக்கம் துருக்கியை உலுக்கியது

டியர்பாகிர்,( துருக்கி) பிப் 6 -  தெற்கு துருக்கியில் ரிக்டர் அளவில் 7.9 எனப் பதிவான  வலுவான நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டது. 

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் சைப்ரஸ், லெபனான் மற்றும் சிரியாவிலும் உணரப் பட்டன. கட்டிடங்கள் இடிந்துள்ளதையும்  குடியிருப்பாளர்கள் தெருக்களில் குழுமியுள்ளதையும் சித்தரிக்கும் படங்களை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின .

தெற்கு துருக்கிய நகரமான கஹ்ராமன்மாராஸுக்கு அருகில் 10 கிலோ மீட்டர்  (6 மைல்) ஆழத்தில் இந்த  நிலநடுக்கம் மையமிட்டடிருந்ததாக  புவி அறிவியலுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம்  கூறியது, அதே நேரத்தில்  கண்காணிப்பு சேவை மையம் சுனாமி ஆபத்துக்கான சாத்தியத்தை ஆராய்ந்து வருவதாக அது தெரிவித்தது.

 இந்த நடுக்கம் சுமார் ஒரு நிமிடம் நீடித்ததாகவும் அதன் தாக்கத்தால்  ஜன்னல்கள் உடைந்தாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

இந்த பேரிடரில் உயிர்த் தப்பியவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடும் காட்சிகளை  தொலைக் காட்சிகள் ஒளிபரப்பின.

 இந்ந நிலநடுக்கத்தில் பல  கட்டிடங்களை அழித்துவிட்டதாகக் கூறிய துருக்கியின்  தென் மாநிலமான சன்லிர்ஃபாவின் ஆளுநர் சலீ அய்ஹான், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வலியுறுத்தினார்.

 கஹ்ரமன்மராஸ்  நகர் மற்றும் சிரிய எல்லைக்கு அருகில் உள்ள பெரிய நகரமான காசியான்டெப்பில்  7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக  துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.

அலெப்போ மாகாணத்தில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக சிரிய அரசு ஊடகம் தெரிவித்தது. அதே நேரத்தில் ஹமா சிவில்  வட்டாரத்திலும்  பல கட்டிடங்கள் நிர்மூலமானதாக கூறப்பட்டது.

Pengarang :