ECONOMYNATIONAL

வர்த்தகத்தில் புதிய வாய்ப்புகளைத் தேட இந்திய சமூகத்திற்கு சிறப்பு கடனுவி- ஹிஜ்ரா வழங்குகிறது

ஷா ஆலம், பிப் 6- இந்தியர்கள் வர்த்தகத்தில் ஈடுபடுவதை ஊக்குவிப்பதற்காக “சித்தம்“ எனப்படும் இந்திய தொழில் ஆர்வலர் மையத்தின் வாயிலாக சிறப்பு கடனுதவித் திட்டத்தை யாயாசான் ஹிஜ்ரா அறவாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மாநிலத்தின் துரித வளர்ச்சிகேற்ப இந்திய சமூகமும் பொருளாதார ரீதியில் மேம்பாடு காண்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த வர்த்தக கடனுதவித் திட்டத்தை  மாநில அரசின் அந்த துணை நிறுவனம் அமல்படுத்தியுள்ளது.

சிலாங்கூரிலுள்ள இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்காக ஹிஜ்ரா அறவாரியம் பிரத்தியேகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டமாக இந்த சித்தம் கடனுதவித் திட்டம் அமைந்துள்ளது.

இந்திய சமூகம் சுய தொழில் மூலம் கூடுதல் வருமானம் பெற்று பொருளாதார ரீதியில் வலுப்பெறுவதை உறுதி செய்வதை இத்திட்டம் இலக்காக கொள்ளப்பட்டுள்ளதாக ஹிஜ்ரா அறவாரியம் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

இந்த கடனுதவித் திட்டம் தொடர்பில் மேல் விபரங்கள் பெற விரும்புவோர் www.hijrahselangor.com என்ற அப்பக்கம் வாயிலாக அல்லது 03-21811585 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

கடந்தாண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் 4,500 தொழில்முனைவோர்  7 கோடி வெள்ளியை ஹிஜ்ரா அறவாரியத்திடமிருந்து  வர்த்தக மூலதனக் கடனுதவியாகப் பெற்றனர்.


Pengarang :