ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

சிலாங்கூர் அனைத்துல ஹலால் மாநாட்டை மந்திரி புசார் இன்று தொடக்கி வைத்தார்

கோலாலம்பூர், மார்ச் 10- சிலாங்கூர் அனைத்துலக ஹலால் மாநாட்டை (செல்ஹாக்) மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று இங்குள்ள கோலாலம்பூர் அனைத்துலக வர்த்தக மையத்தில் அதிகாரப்பூர்வாகத் தொடக்கி வைத்தார்.

இரண்டாம் ஆண்டாக நடத்தப்படும் “சிலாங்கூர்-அனைத்துலக ஹலால் நுழைவாயில்“ எனும் தலைப்பிலான இந்த மாநாட்டில் ஹலால் தொழில்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி, மாநில அரசு செயலாளர் டத்தோ ஹரிஸ் காசிம், மந்திரி புசார் கழகத்தின் (எம்.பி.ஐ.) தலைமைச் செயல்துறை அதிகாரி நோரித்தா முகமது சீடேக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக பேங்க் இஸ்லாம் மற்றும் எம்.பி.ஐ. துணை நிறுவனமான ஹால் இண்டர்நேஷனல் சிலாங்கூர் இடையே நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் சடங்கையும் மந்திரி புசார் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து வங்காளதேசம், ஆஸ்திரேலியா, தாய்லாந்து, இங்கிலாந்து, வியட்னாம், கனடா மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் பங்கேற்ற வர்த்தக கண்காட்சியையும் அமிருடின் பார்வையிட்டார்.

இந்த கண்காட்சியில் எம்.பி.ஐ., பேங்க் இஸ்லாம், மேபேங்க் இஸ்லாமிக் பெர்ஹாட், சிலங்கூர் இஸ்லாமிய சமய மன்றம், யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர், சாத்தே காஜாங் ஹாஜி சமூரி உள்ளிட்ட 200 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

இன்று தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் சுமார் 8,000 வருகையாளர்களை ஈர்க்கவும் 5 கோடி வெள்ளி மதிப்பிலான இணை முலீட்டை பதிவு செய்யவும் ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.


Pengarang :