ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

ஜோகூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 26,381ஆக குறைந்தது

ஜோகூர் பாரு, மார்ச், 17- வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஜோகூர் மாநிலத்தில் துயர் துடைப்பு மையங்களில் தங்கி உள்ளவர்களின் எண்ணிக்கை இன்று காலை 26,381ஆக குறைந்தது. நேற்றிரவு 8.00 மணியளவில் 28,088 பேர் நிவாரண மையங்களில் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 7,418 குடும்பங்களைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் பத்து பகாட் மற்றும் சிகாமாட் ஆகிய மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள 95 துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்தது.

வெள்ளத்தில் மிகவும் மோசமாக  பாதிக்கப்பட்ட மாவட்டமான பத்து பஹாட்டில் 7,404 குடும்பங்களைச் சேர்ந்த 26,337 பேர் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ள வேளையில் சிகமாட்டில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 44 பேர் நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.

மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று காலை வானிலை தெளிவாக காணப்பட்டதோடு அனைத்து ஆறுகளில் நீர்மட்டம் அபாயக் கட்டத்தில் காணப் படவில்லை.

எனினும், வெள்ளம் காரணமாக பத்து பகாட் மாவட்டத்தில் ஐந்து சாலைகள் இலகு ரக வாகனங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை செயல் குழு கூறியது. அச்சாலைகளில் கனரக வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது.


Pengarang :