ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இவ்வாண்டு மார்ச் 15 வரை மாநிலத்தின் வருமானம் வரை 90 கோடி வெள்ளி

ஷா ஆலம், மார்ச் 18- இம்மாதம் 15ஆம் தேதி வரை சிலாங்கூர் மாநிலம்  89 கோடியே 31 லட்சத்து 10 ஆயிரம் வெள்ளியை வருமானமாகப் பதிவு செய்துள்ளது. அரசு நிர்ணயித்திருந்த இவ்வாண்டிற்கான மொத்த வருமான இலக்கான 205 கோடி வெள்ளியில் இது ஏறக்குறைய பாதித் தொகையை  பிரதிபலிக்கிறது.

கடந்தாண்டின் முதல் மூன்று மாதங்களில் ஈட்டப்பட்ட வருமானத்துடன் ஒப்பிடுகையில் இது 26 கோடியே 51 லட்சத்து 10 ஆயிரம் வெள்ளி அதிகமாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கடந்தாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை வசூலிக்கப்பட்டத் தொகையுன் ஒப்பிடுகையில் இது 26 கோடியே 51 லட்சத்து 10 ஆயிரம் வெள்ளி அதிகமாகும். கடந்தாண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி வரை 62 கோடியே 80 லட்சம் வெள்ளியை மட்டும் நாம் வருமானமாகப் பெற்றிருந்தோம் என்றார் அவர்.

மாநில சட்டமன்றத்தில் நேற்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மாநிலத்தின் நிதிக் கையிருப்பும் 370 கோடி வெள்ளியாக அதிகரித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டிற்குப் பின்னர் பதிவான உயரிய கையிருப்பு இதுவாகும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

நான் மந்திரி புசாராக பதவியேற்ற போது மாநிலத்தின்  நிதிக் கையிருப்பு 210 கோடி வெள்ளியாக மட்டுமே இருந்தது. கடந்தாண்டு இறுதியில் இந்த தொகை 310 கோடி வெள்ளியாக உயர்ந்தது. இவ்வாண்டு மார்ச் மாதம் வரை 370 கோடி வெள்ளியாக அபரிமித அதிகரிப்பைக் கண்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :