ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோலசிலாங்கூரில் அடையாள பத்திர மற்றும் குடியுரிமை விவகாரம் தொடர்பான ஒரு நாள் முகாம்

கோலசிலாங்கூர் மார்ச் 28;- ஞாயிற்றுக்கிழமை மார்ச்  26 ன்று, கோலசிலாங்கூர் அசாம் ஜாவா பாலாய் ராயா மண்டபத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளான அடையாள அட்டை, பிறப்பு பத்திரம், பிள்ளை தத்தெடுப்பு பத்திரம்,மற்றும் குடியுரிமை விவகாரம் பற்றிய முகாம் ஒன்று இங்கு நடத்தப் பட்டது.
முகாமின் முதல் அங்கமாக கோலசிலாங்கூர் நாடாளுமன்ற  உறுப்பினர் மாண்புமிகு  Y.b. டத்தோ ஸ்ரீ  டாக்டர் ஹஜி சூல்கிப்லி பின் அமாட் , மாண்புமிகு  y.b. ஜுவாரியா சூல்கிப்லி ஆகிய இருவரும் இந்த முகாமிற்கு வருகை அளித்து  இங்கு வந்த மக்களிடம்  அவர்களின்  பிரச்சனைகளை கேட்டறிந்தனர்.

அதன் பிறகு மக்கள் முன்னிலையில் பேசிய Y.b. ஜூவாரிய சூல்கிப்லி பின் அமாட்,  அடையாள அட்டை பிரச்சனை மற்றும்  இதர ஆவண  பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மக்கள்  அதற்கான பாரங்களை பூர்த்தி செய்து, அங்குள்ள அதிகாரிகளிடம்  ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டார்.  .அதன் பிறகு அந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இலாக்காவிடம் ஒப்படைக்கப்பட்டு  பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்று கூறினார்.

அவரின் உரையை அடுத்து  கோலசிலாங்கூர்  தொகுதி  இந்தியர் கிராமத்து தலைவர் திரு:கலைகுமார் ஆறுமுகம் பேசுகையில் இன்று இந்த முகாமிற்கு வருகை அளித்த கோலசிலாங்கூர்  நாடாளுமன்ற உறுப்பினர் YB .டத்தோ ஸ்ரீ டாக்டர் ஹஜி  சூப்கிப்லி  பின் அமாட்,  YB ஜூவாரியா சூல்கிப்லி  மற்றும்  சிலாங்கூர் ஆட்சி குழு உறுப்பினர் திரு :கணபதிராவ்   அவர்களுக்கும்  மனமார்ந்த நன்றியை கூறினார்.

இன்று  தன்னோடு இணைந்து பணியில் ஈடுபட்டிருக்கும் சிலாங்கூர் கிராமத்து தலைவர்களுக்கும், தனது  மனமார்ந்த நன்றியை கூறிக் கொண்டார்.

சுமார் 300 – பேர் வருகையளித்த இந்த முகாம்  காலை 10:00 -மணிக்கு
தொடங்கிய  நிகழ்வு  மாலை 6:00  வரை நடைபெற்றது


Pengarang :