NATIONAL

கைபேசியைப் பறித்தவர்களை துரத்திய போது நேர்ந்த துயரம்- மூன்று கார்கள் மோதுண்டதில் ஒருவர் மரணம்

பத்து பஹாட், மார்ச் 29- தனது கைப்பேசியைப் பறித்தவர்களைத் துரத்திப்
பிடிப்பதற்கு ஆடவர் ஒருவர் மேற்கொண்ட முயற்சி பெரும் விபரீத த்தில்
முடிந்தது. இந்த துரத்தல் முயற்சியின் போது மூன்று கார்கள்
ஒன்றோடொன்று மோதிக் கொண்ட வேளையில் கைப்பேசியைப் பறித்துச்
சென்ற நபரும் அந்த விபத்தில் சிக்கி பரிதாபமாக மாண்டார்.

புரோட்டோன் வீரா, பெரேடுவா அக்சியா, மஸ்டா சிஎக்ஸ்5 ஆகிய மூன்று
வாகனங்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்து பாரிட் சூலோங், ஜாலான் பாரிட்
ஜாலிலில் நேற்று மாலை 3.30 மணியளவில் நிகழ்ந்த தாக பத்து பஹாட்
மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி இஸ்மாயில் டோலா கூறினார்.

தனது கைப்பேசியைப் பறித்துக் கொண்டு புரோடோன் வீரா காரில் தப்பிச்
சென்ற இருவரை 31 வயதுடைய மஸ்டா காரின் ஓட்டுநர் துரத்திய போது
அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டிருந்த
புரோட்டோன் வீரா காரை மோதியதாக ஏசிபி இஸ்மாயில் சொன்னார்.

இந்த மோதலின் தாக்கத்தால் கட்டுப்பாட்டை இழந்து எதிர்தடத்தில்
நுழைந்த புரோடோன் வீரா காரை எதிரே வந்த பெரேடுவா அக்சியா கார்
மோதியது என்று அவர் பத்து பஹாட் மாவட்டப் போலீஸ்
தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்த விபத்தில் புரோட்டோன் காரில் பயணித்த 43 வயது ஆடவர் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்த வேளையில் காரை ஓட்டிய நபர் லேசான
காயங்களுக்குள்ளானார். பெரேடுவா காரில் பயணித்த கணவன்-மனைவி
இருவரும் கடுமையான காயங்களுக்குள்ளாகினர் என்றார் அவர்.

இச்சம்பவம் தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச்
சட்டத்தின் 41(1) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக
அவர் மேலும் சொன்னார்.


Pengarang :