NATIONAL

வீட்டில் தீவிபத்து- புகையைச் சுவாசித்ததால் மாற்றுத் திறனாளி பெண் மரணம்

பொந்தியான், மார்ச் 29- இங்குள்ள ஆயர் பாலோய், கம்போங் பாரிட் ஹாஜி
எலியாசில் உள்ள வீடொன்றில் நேற்று நிகழ்ந்த தீச்சம்பவத்தில் மாற்றுத்
திறனாளி பெண்மணி ஒருவர் உயிரிழந்ததற்குப் புகையைச் சுவாசித்ததே
காரணம் என்று போலீசார் கூறினார்.

இந்த தீவிபத்து குறித்து நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் தாங்கள்
புகாரைப் பெற்றதாகப் பொந்தியான் மாவட்டப் போலீஸ் தலைவர்
சூப்ரிண்டெண்டன் முகமது ஷோபி தாயிப் கூறினார்.

இச்சம்பவத்தில் 48 வயதுடைய அந்த மாற்றுத் திறனாளி மாது உடலில்
தீக்காயங்களோடு அவ்வீட்டிலியே இறந்து கிடந்ததாக அவர் சொன்னார்.

அவ்வீட்டின் சமையலறையில் ஏற்பட்டத் தீ பின்னர் வீடு முழுவதும்
பரவியதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். எனினும், இந்த
விபத்துக்கான காரணத்தைக் கண்டறியும் பணியில் பொந்தியான் மாவட்ட
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தடயவியல் பிரிவினர் ஈடுபட்டு
வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

வீட்டில் மாற்றுத் திறனாளிகள் இருக்கும் பட்சத்தில் வெளியில் செல்லும்
போது அவர்களைத் விடுவதை தவிர்க்கும் அதேவேளையில் அவசியம்
ஏற்படும் பட்சத்தில் அண்டை வீட்டாரின் உதவியைப் பெறும்படி
பொதுமக்களுக்கு அவர் ஆலோசனை கூறினார்.


Pengarang :