ECONOMYMEDIA STATEMENT

கோம்பாக்கைச் சுற்றி, ரி.ம 500,000 மதிப்புள்ள  சாலை பராமரிப்பு திட்டத்தில் 10 ஒப்பந்ததாரர்கள்

ஷா ஆலம், ஏப்ரல் 7: கோம்பாக்கைச் சுற்றியுள்ள பொதுப் பணித் துறை சாலைகளை பராமரிப்பதற்காக மொத்தம் 10 G1 வகுப்பு ஒப்பந்த நிறுவனங்கள் RM500,000 மதிப்பிலான திட்டங்களுக்கு டெண்டர்களை பெற்றுள்ளன.

உள்கட்டமைப்பு  நிறுவன ஆட்சிக்குழு உறுப்பினர் கூறுகையில், குழி மற்றும் சேதங்களை பழுதுபார்த்தல், சாலை கோடுகள் அமைத்தல், பாதையை சுத்தம் செய்தல் மற்றும் சம்பந்தப்பட்ட சாலையின் ஓரங்களில் உள்ள மரங்களை வெட்டுதல் போன்றவற்றுக்கு குத்தகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த திட்டம் 144 ஒப்பந்ததாரர்களின் கவனத்தை ஈர்த்தது, ஆனால் நாங்கள் குலுக்கல் முறையில் 10 நிறுவனங்களை மட்டுமே தேர்ந்தெடுத்தோம். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் தலா ரி.ம 50,000 மதிப்புள்ள திட்டங்களைக் கையாள வேண்டும்.

“இந்த பராமரிப்பு பணியை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்ததாரர் பணியை சிறப்பாக செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று ஐ ஆர்.இஷாம் ஹாஷிம் கூறினார்.

குலுக்கல் முறை தேர்ந்தெடுத்தல் முறையாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக குத்தையாளர்கள் சங்க பிரதிநிதிகள் மற்றும் பூமிபுத்ரா ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கும் செயல்முறையை கண்காணித்தனர் என்றார்.

முன்னதாக, பயனாளர்களின் வசதிக்காக மாநிலம் முழுவதும் பெரிய அளவில் சாலை அமைக்கும் பணி இம்மாத இறுதியில் மேற்கொள்ளப்படும் என்று இஷாம் தெரிவித்தார்.

அவரது கருத்துப்படி, சிலாங்கூர் பட்ஜெட் 2023ன் மூலம் ரிம 50 மில்லியன் செலவில் உள்ள திட்டமானது ஊராட்சி மன்ற (பிபிதி) நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து சாலைகளையும் உள்ளடக்கியது.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறுகையில், புகைப்படங்கள், புகார்கள் எழுதுதல் மற்றும் #infrasel #daerah #namajalan வேலி அடையாளம் உள்ளிட்டவற்றை ட்விட்டர் பயன்பாட்டின் மூலம் மக்கள் தங்கள் சமூகங்களில் சேதமடைந்த சாலைகள் குறித்து புகார் அளிக்க ஊக்குவித்தார்.

மாநில சாலை பராமரிப்பு நிறுவனம் இன்ஃப்ராசெல் நிர்வாகம் (Infrasel) ட்விட்டர் மூலம் பொதுமக்களிடமிருந்து புகார்களைப் பெற்ற 24 மணி நேரத்திற்குள் சாலை பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.


Pengarang :