ACTIVITIES AND ADSMEDIA STATEMENTPBT

பெருநாள்  பலகாரங்கள் தயாரிப்பு  வருமானம் ஈட்ட  ஒரு வாய்ப்பு 

ஷா ஆலம், ஏப்ரல் 7: பந்திங் மாநில சட்டமன்ற தொகுதி  (டுன்) பெருநாள் பலகாரங்கள் தயாரிக்கும் இலவச  பட்டறையை பெண்களுக்கு  ஏப்ரல் 16 அன்று ஏற்பாடு செய்கிறது.

 பாதாம் பிஸ்கட் மற்றும் வேர்க்கடலை மசோலா பிஸ்கட்கள் தயாரிப்பது குறித்து பாடத்திட்டத்தை பண்டார் மக்கோத்தாவில் உள்ள பலாய் ராயா தாமான் மென்தாரியில் நடக்கும்  பயிலரங்கில் கற்பிக்கப்படும் என அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  லாவ் வெங் சான் தெரிவித்தார்.

“பந்திங் மாநில சட்டமன்றம் பெண்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான இந்த பட்டறையை ஏற்பாடு செய்கிறது,  இதனால் அவர்கள் பெருநாள் பலகாரங்கள் தயாரிப்பதில் தேர்ச்சி பெற முடியும்.

“இந்தப் பட்டறையின் மூலம் பெறப்படும் திறன்கள், குறிப்பாக பண்டிகைக் காலங்களில் அவர்களுக்கு வருமானத்தை ஈட்ட உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று தொடர்பு கொண்ட போது கூறினார்.

இந்த ஆண்டு இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி, கோலா லங்காட் நகராண்மை கழக உறுப்பினர்  மண்டலம் 13 மற்றும் புசாட் வனிதா பெர்டாயா சிலாங்கூர் (PWB) இணைந்து மேற்கொள்ளப்படுவதாக லவ் வெங் சான் கூறினார்.

பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும், வணிகத்தில் அவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இது போன்ற திட்டங்களை தனது கட்சி தொடர்ந்து நடத்தும் என்றார்.

” பயிற்சியாளர்கள் தங்கள்  முழு கவனத்தை  செலுத்துவதையும், பங்கேற்பாளர்கள் வசதிக்காக  நாங்கள் 30 பங்கேற்பாளர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது,” என்று அவர் கூறினார்.


Pengarang :