ECONOMYSELANGORSUKANKINI

சிலாங்கூர் 21வது சுக்மாவுக்கு பயிற்சி மற்றும் பூர்வாங்க ஆயத்தப் பணிகளை தொடங்கியது.

ஷா ஆலம், ஏப்ரல் 8: அடுத்த ஆண்டு சரவாக்கில் நடைபெறும் 21வது மலேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான (சுக்மா) பயிற்சி மற்றும் பூர்வாங்க ஆயத்தப் பணிகளை சிலாங்கூர் குழுவினர் தொடங்கி  விட்டனர்.

சிலாங்கூர் மாநில  விளையாட்டு கவுன்சில் (MSN) முதல் மூன்று இடங்களை  அடையும் இலக்கை கொண்டு அதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்கும் என்று  விளையாட்டுத்துறை EXCO வான முகமட் கைருடின் ஓத்மான் கூறினார்.

“இந்த  இலக்கை அடைய கடந்த ஆண்டு 20வது சுக்மா முடிவடைந்த உடன் நாங்கள் பயிற்சியைத் தொடங்கிவிட்டோம். நாங்கள் என்ன செய்கிறோம் என்பது MSN இல் உள்ள விளையாட்டு அறிவியல் பிரிவை மேம்படுத்துவதாகும்.

"விளையாட்டு வீரர்களின் செயல்திறனைக் கண்காணிப்பதிலும் பராமரிப்பதிலும் நிபுணத்துவம் பெற்ற MSN உதவி இயக்குநரின் பொறுப்பின் கீழ் இந்தப் பிரிவு வைக்கப்படும்," என்று அவர் கூறினார்.

முன்னதாக, அவர் அங்குள்ள டேவான் ராஜா மூடா மூசாவில் நடந்த 20வது சிலாங்கூர் சுக்மா கொண்டிஜெண்ட் வெற்றி ஊக்க விழாவில் கலந்து கொண்டார். MSN நிர்வாக இயக்குனர் முகமட் நிஜாம் மர்ஜுகியும் கலந்து கொண்டார்.

விளையாட்டு அறிவியல் பிரிவு விளையாட்டாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களை  கடந்து  பல   மேம்பாடுகளைச் செயல்படுத்த விளையாட்டு வீரர்களின் செயல்திறனை மறுமதிப்பீடு செய்யும் என்று முகமட் கைருதீன் விளக்கினார்.

அவரைப் பொறுத்தவரை, தங்கத்திற்கு பங்களிக்கக் கூடிய விளையாட்டுகளில் நீச்சல் போட்டிகள், தடகளம், கராத்தே மற்றும் துப்பாக்கி சுடுதல் ஆகியவை அடங்கும்.

“இதெல்லாம் ஒழுங்காக நடந்தால் முதல் மூன்று இடங்கள் என்ற இலக்கை எட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இது முடியாதது அல்ல,'' என்றார்.

கடந்த ஆண்டு 20வது சுக்மாவில், சிலாங்கூர் 32 தங்கம், 54 வெள்ளி மற்றும் 45 வெண்கலப் பதக்கங்களை கொண்டு வந்து நான்காவது இடத்தைப் பிடித்தது.

Pengarang :