ECONOMYNATIONALSUKANKINI

ஹரிமாவ் மலாயா அணி, இந்த ஆண்டு இறுதிக்குள் உலகின் 120 சிறந்த அணிகளுக்குள் ஒன்றாக வளரும் திறனைக் கொண்டுள்ளது.

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 8: சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிஃபா) சமீபத்திய புதுப்பித்தலில் 138 வது இடத்திற்கு உயர்ந்துள்ள ஹரிமாவ் மலாயா அணி, இந்த ஆண்டு இறுதிக்குள் உலகின் 120 சிறந்த அணிகளுக்குள் நுழையும் திறனைக் கொண்டுள்ளது.

ஜூன், செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் ஃபிஃபா சர்வதேசப் போட்டிகளின் சாளரத்தில் அனைத்து ஆறு  ஆட்டங்களில்   நல்ல முடிவுகளை அடைய முடிந்தால், தேசிய அணி தொடர்ந்து சிறந்த நிலைக்கு வரும் என்று மலேசிய கால்பந்து சங்கத்தின் (எஃப்ஏஎம்) தலைவர் டத்தோ ஹமிடின் முகமட் அமின் நம்புகிறார்.

நவம்பரில் தொடங்கும் 2026 உலகக் கோப்பை  2027 ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றில் இரண்டு குழு நிலை ஆட்டங்களிலும் கிம் பான் கோன் பயிற்சியளித்த அணி அதிக தரவரிசை புள்ளிகளைச் சேகரிக்க முடியும் என்று ஹமிடின் கூறினார்.

“எனவே இந்த செயல்முறை நவம்பர் வரை தொடர்ந்தால் மற்றும் வெற்றி மலேசியாவிற்கு சாதகமாக இருந்தால், நாங்கள் 120 அல்லது அதற்கு மேல் உயரலாம், அது உண்மையில் எங்கள் விருப்பம், ஆனால் நாம் கடினமாக உழைக்க வேண்டும், மிக முக்கியமாக இந்த FIFA தரவரிசையை   தற்காக்க வேண்டும்.

2023 FAM தாராவிஹ் நோன்பு துறந்தல்  மற்றும் பிரார்த்தனை விழாவில் சந்தித்தபோது, “1995 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து 2010 ஆம் ஆண்டின் இறுதியில்  வரை  நாம் கீழே விழுந்துவிட்டோம் என, விஸ்மா FAM இல், கெளானா ஜெயாவில்  குறிப்பிட்டார்.

கடந்த மாதம் டயர் 1 சர்வதேச நட்பு ரீதியில் துர்க்மெனிஸ்தான் மற்றும் ஹாங்காங்கை எதிர்த்து தலா இரண்டு வெற்றிகளை பெற்றதைத் தொடர்ந்து, இந்த மாதம் வெளியிடப்பட்ட FIFA தரவரிசையில் மலேசியா ஏழு இடங்கள் முன்னேறி 145 வது இடத்திலிருந்து 138 வது இடத்திற்கு முன்னேறியது.

138 வது இடத்தில், ஹரிமாவ் மலாயா அணி 1993 இல் 75 வது இடத்தில் இருந்த சிறந்த நிலையில் இருந்து 63 படிகள் தரம் இறங்கியுள்ளது.

மேலும் கருத்து தெரிவித்த ஹமிடின், தரவரிசையை தக்கவைக்கவும் அதே நேரத்தில் அணியின் தரத்தை மேம்படுத்தவும் ஹரிமாவ் மலாயா அணிக்கு எதிராக விளையாடும் அணியை முடிவு செய்வதில் பான் கோன் மற்றும் FAM தொழில்நுட்ப இயக்குனர் ஸ்காட் ஓ’டொனெல் மற்றும் தானும் சாதுரிமாக  இருக்க வேண்டும் என்றார். .

அவரைப் பொறுத்தவரை, உலக ஜாம்பவான்களை ஒரு முறை வீழ்த்தினாலோ வெற்றி பெற்றாலும் தேசிய அணியின் தரவரிசை தொடர்ந்து உயராது, ஓரு, தோல்வியை சந்தித்தாலும் அது எளிதில் வீழ்ச்சியடையாது.

“ஒரு முறை தோற்றால், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும், இதனால் தரவரிசை பாதிக்கப்படாது,

இன்று பிரேசிலுக்கு எதிராக வென்றால், நம்பர் ஒன் ஆக முடியாது. இதன் பொருள் நாம் தரவரிசையை தக்க வைத்துக் கொண்டு படிப்படியாக  வெற்றிகளை அதிகரிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.


Pengarang :