ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

கம்போங் பாரு ஹைக்கோம் பி.பி.ஆர். குடியிருப்பில் தானியங்கி வாயிற் கதவு உள்ளிட்ட வசதிகள்- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், ஏப் 9- இங்குள்ள கம்போங் பாரு ஹைக்கோம் மக்கள் குடியிருப்பு பகுதியில் (பி.பி.ஆர்.)கார் நிறுத்துமிட நுழைவுக்கு தானியங்கி வாயிற் கதவு உள்பட பல்வேறு  அடிப்படை வசதிகளை மேம்படுத்த படவுள்ளதாக கூறினார்.

அந்த வீடமைப்பு பகுதியில் நிலவும் கார் நிறுத்துமிடப் பிரச்சினையைக் களைவதற்காக மந்திரி புசாரின் நிதி ஒதுக்கீட்டில் தானியங்கி வாயிற் கதவு அமைக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ  அமிருடின் ஷாரி கூறினார். இது தவிர இப் பகுதி மக்களின் வசதிக்காக புட்சால் திடல் ஒன்றும் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இவ் வட்டாரத்திலுள்ள மாணவர்களின் வசதிக்காக ஷா ஆலம் மாநகர் மன்ற ஏற்பாட்டில் இலவச பஸ் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இந்த சேவை குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

இதனைத் கருத்தில் கொண்டு கடந்த வரவு செலவுத் திட்டத்தின் போது ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு வேன் அல்லது சிறிய பஸ் சேவையை இவ் வட்டார மக்களுக்கு ஏற்படுத்தித் தர நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம் என்றார் அவர்.

மந்திரி பெசார் என்ற முறையில் எனது  சொந்த நிதி ஒதுக்கீட்டில் தானியங்கி வாயிற் கதவை அமைக்கும் பட்சத்தில் இந்த அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் எதிர்நோக்கி வரும் கார் நிறுத்துமிடப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள கம்போங் பாரு ஹைக்கோம் பி.பி.ஆர். குடியிருப்பு பகுதியில் கே2கே என்னும் நமக்கு நாம் திட்டத்தை தொடக்கி  வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடக்கி வைத்தார்.


Pengarang :