ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

புயல் காற்றில் பாதிக்கப்பட்ட சிப்பாங், பூச்சோங் வட்டார மக்களுக்கு மாநில அரசு உடனடி உதவி 

ஷா ஆலம், ஏப் 9-  கடுமையான புயல் காற்றினால் பாதிக்கப்பட்ட சிப்பாங் மற்றும் பூச்சோங் வட்டார மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு விரைந்து ஒருங்கிணைக்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கான பணிகளை ஊராட்சி மன்றங்களும் எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகமும் ஒருமுகப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

சிப்பாங் மற்றும் பூச்சோங்கில் வீசிய கடுமையான புயல்காற்றில் வீடுகளும் பல குடியிருப்புகளும் சேதமடைந்தது தொடர்பில் எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நடவடிக்கைகளை ஊராட்சி மன்றங்கள் மற்றும் எம்.பி.ஐ. வாயிலாக மாநில அரசு விரைந்து மேற்கொள்ளும் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

இதனிடையே, இப்புயல் காற்றினால் கம்போங் பூலாவ் மெராந்தி, தாமான் புத்ரா பெர்டானா மற்றும் அங்சானா பூச்சோங் 2 ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் சேதமடைந்ததாக டிங்கில் சட்டமன்ற உறுப்பினர் அட்ஹிப் ஷியான்  அப்துல்லா கூறினார்.

இப்பகுதிகளில் உள்ள வீடுகள், பள்ளிவாசல்கள், வர்த்தக மையங்கள், மற்றும் புத்ரா பெர்டானா ரமலான் சந்தை ஆகிவையும் பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.


Pengarang :