ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

சிலாங்கூரின் ஐந்து மாவட்டங்களில் மாலை 4.00 மணி வரை கனமழை- வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

ஷா ஆலம், ஏப் 28- சிலாங்கூர் மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் இன்று மாலை 4.00 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனத்த மழையும் பலத்த் காற்றும் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உலு சிலாங்கூர், கோம்பாக், பெட்டாலிங், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகியவையே அந்த ஐந்து மாவட்டங்களாகும் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை கூறியது.

மேலும், கோலாலம்பூர், புத்ரா ஜெயா, மலாக்காவிலும் பகாங், நெகிரி செம்பிலான் ஜோகூர், சரவா மற்றும் சபா ஆகிய மாநிலங்களிலும் இதே நிலை நீடிக்கும் என அத்துறை அறிக்கை ஒன்றில் கூறியது.

ஒரு மணி நேரம் அல்லது அதற்கும் மேல் மணிக்கு 20 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்வதற்கான சாத்தியம் சாத்தியம் இருக்கும் பட்சத்தில்  மலேசியா வானிலை ஆய்வுத் இந்த எச்சரிக்கையை விடுக்கும்.

இந்த இடியுடன் கூடிய மழை தொடர்பான எச்சரிக்கை வெளியிடப்பட்ட ஆறு மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகக்கூடிய ஒரு குறுகியகால எச்சரிக்கையாகும்.

வானிலை தொடர்பான ஆகக் கடைசி மற்றும் உண்மையான தகவல்களுக்கு பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தை பார்வையிடலாம் அல்லது  myCuaca செயலியை பதிவிறக்கவும் செய்யலாம்.

 


Pengarang :