NATIONAL

சாலையில் விழுந்த மரத்தில் வாகனங்கள் மோதியதில் அறுவர் பலி

கோலாலம்பூர், ஏப்ரல் 30: நேற்று பெய்த பலத்த மழை மற்றும் புயலின் போது, அம்பாங் நோக்கிச் செல்லும் எம் ஆர் ஆர் 2 விரைவுச் சாலையின் நுழைவாயில் அருகே விழுந்த மரத்தில் மூன்று வாகனங்கள் மோதியதில் ஆறு பேர் உயிரிழந்தனர். அதில் மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் அடங்குவர்.

கோலாலம்பூரில் உள்ள மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இச் சம்பவத்தில் உயிரிழந்த ஆறு பேரும் பெரோடுவா அல்சா, பெரோடுவா மைவி மற்றும் புரோட்டான் எக்ஸோரா என மூன்று தனித்தனி வாகனங்களில் பயணித்தவர்கள் ஆவர்.

நேற்று பிற்பகல் 3.19 மணி அளவில் இச்சம்பவம் குறித்து அவரது தரப்புக்கு அழைப்பு வந்த உடன் சுங்கை பீசி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் இருந்து இயந்திரங்களுடன் எட்டு உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்த தாகச் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

பாதிக்கப்பட்ட பிறர் அந்தந்த வாகனங்களில் இருந்து வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான நிலையில் இருப்பதாக அவர் கூறினார்.

“மலேசியக் குடிமைத் தற்காப்புப் படை மற்றும் கோலாலம்பூர் நகராட்சியுடன் இணைந்து தீயணைப்பு வீரர்கள் விழுந்த மரங்களை அகற்றி சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டுள்ளனர்” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

– பெர்னாமா


Pengarang :