MEDIA STATEMENTSUKANKINI

சீ விளையாட்டுப் போட்டியில் தடையோட்டம் மூலம் மலேசியாவுக்கு முதல் பதக்கம்

புனோம் பென், மே 6- இங்கு நடைபெறும் 2023 சீ விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான தடையோட்டத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்ததன் மூலம் மலேசியாவின் ஓட்டப்பந்தய வீரர் நாட்டிற்கு முதலாவது பதக்கத்தை பெற்றுத் தந்தார்.

இங்குள்ள ச்ரோய் சாவ்கார் மாநாட்டு மையத்தின் கார் நிறுத்துமிடத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் யோங் வேய் தெங் எனும் அந்த மலேசிய விளையாட்டாளர் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

பந்தயம் தொடங்கியது முதல் கம்போடிய விளையாட்டாளரான ஒய் சவ்ஹெங் யோங்கிற்கு கடும் போட்டியைத் தந்த வண்ணம் இருந்தார்.

எனினும், இரண்டாவது தடையை தாண்டும் போது இடறி விழுந்ததால் மலேசிய விளையாட்டாளரை அவரால் முந்த முடியாத நிலை ஏற்பட்டது.

100 மீட்டர் கொண்ட இந்தப் போட்டியில் யோங் அனைத்து தடைகளையும் 28.234 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கத்தை பெற்றார்.

இந்தப் போட்டியில் பிலிப்பைன்சை சேர்ந்த மார்க் ஜூலியஸ் 25.194 விநாடிகளில் போட்டியைத் முடித்து தங்கப்பதக்கம் வென்ற வேளையில் 26.814 விநாடிகளுடன் அதே நாட்டைச் சேர்ந்த கெவின் ஜெப்ரி இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.


Pengarang :