ECONOMYSELANGOR

கம்போங் குவாந்தானில் வெ.400,000 செலவில் மண்டபம்- சட்டமன்ற உறுப்பினர் ஜூவாய்ரியா தகவல்

கோல சிலாங்கூர், மே 6- இங்குள்ள கம்போங் குவாந்தானில் நான்கு லட்சம் வெள்ளி செலவில் சிலாங்கூர் பென்யாயாங் சமூக மண்டபத்தை நிர்மாணிக்கும் பணியில் புக்கிட் மெலாவத்தி சட்டமன்றத் தொகுதி ஈடுபட்டு வருகிறது.

இந்த மண்டப நிர்மாணிப்புத் திட்டம் சுற்றுவட்டாரத்திலுள்ள நான்கு கிராமங்களுக்கு குறிப்பாக பாசாங்கான் துணை மாவட்டத்திற்கு பெரிதும் பலனளிக்கும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி கூறினார்.

இந்த சிலாங்கூர் பென்யாயாங் மண்டபத்தை நிர்மாணிப்பதற்கு நான் கம்போங் குவாந்தான் பகுதியைத் தேர்ந்தெடுத்துள்ளேன். இந்த மண்டப நிர்மாணிப்பு முழுமை பெற சிறிது காலம் பிடிக்கும். எனினும் இதனால் சிறப்பான பலன் கிட்டும் என அவர் தெரிவித்தார்.

இந்த வட்டாரத்தில் சமூக மண்டபம் எதுவும் இல்லை. தற்போது அமலாக்க நிலையில் உள்ள அனைத்து திட்டங்களும் முழுமை பெற சிறிது காலம் பிடிக்கும். இந்த திட்டம் வரும் ஜூலை மாதத்திற்கு முன்பாக முழுமை பெறும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

இங்குள்ள டத்தாரான் மெலாவத்தியில் இன்று காலை நடைபெற்ற புக்கிட் மெலாவத்தி லெபாரன் ஓட்டப்பந்தைய தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

சுமார் 1,300 பேர் கலந்து கொண்ட இந்த ஓட்டப்பந்தயத்தை இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை துணையமைச்சர் ஆடாம் அட்லி அப்துல் ஹலிம் தொடக்கி வைத்தார்.


Pengarang :