ECONOMYMEDIA STATEMENTNATIONAL

முஹிபா உணர்வுடன் கோம்பாக் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு- வருகையாளர்கள் மகிழ்ச்சி

கோம்பாக், மே 15- மத்திய அரசின் மடாணி மலேசிய நோன்புப் பெருநாள் பொது உபசரிப்புடன் சேர்த்து நடத்தப்பட்ட ஜெலாஜா கித்தா சிலாங்கூர் அய்டில்பித்ரி உபசரிப்பு முஹிபா உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தது.

இனங்களுக்கிடையிலான ஒற்றுமை உணர்வை நேரில் கண்டு அனுபவிக்கும் நோக்கில் தன் மனைவி திருமதி பி.பன்னீர் கொடியுடன் (வயது 59) இந்த பொது உபசரிப்புக்கு வந்ததாக என்.ராமு (வயது 66) கூறினார்.

இந்த நிகழ்வில் படைக்கப்பட்ட பல்வேறு வகையிலான உணவுகள் மலேசியர்களின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இருந்ததோடு விருந்து நிகழ்வுக்கு மெருகையும் ஏற்றியதாக அவர் சொன்னார்.

பல்லின மக்களுக்கிடையே முஹிபா உணர்வை பிரதிபலிக்கும் வகையில் உள்ள காரணத்தால்  இதுபோன்ற நிகழ்வுகளில் நாங்கள் வழக்கமாக கலந்து கொள்வோம். இது தவிர. இங்கு பல விதமான பதார்த்தங்களும் பரிமாறப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மூத்த குடிமகள் என்ற முறையில் பல்வேறு அனுகூலங்களை தாம் அனுபவித்து வரும் காரணத்தால் சிலாங்கூர் மாநிலத்தை பக்கத்தான் அரசாங்கம் தொடர்ந்து ஆட்சிபுரிந்து வர வேண்டும் எனத் தாம் விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நோன்புப் பெருநாள்  பொது உபசரிப்பு மிகவும் சிறப்பானதாக இருந்ததாக கணவன் மனைவியான முகமது யூசுப் மன்சோர் (வயது 30) மற்றும் நுர் யுஷாய்ரின் யுஸ்மான் (வயது 26) தம்பதியர்  கூறினர்.

தாம் இதற்கு முன்னர் பல நோன்புப் பெருநாள் பொது உபசரிப்புகளில் கலந்து கொண்ட போதிலும் இந்த நிகழ்வுக்கு இணையாக வேறு எந்த நிகழ்வையும் கூற  முடியாது என அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வு மிகவும் விலாசமான இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் வருகையும் நிகழ்வுக்கு மேலும் சிறப்பு சேர்த்தது. அதோடு ருசிமிக்க பல வகை உணவுகளும் இங்கு பரிமாறப்பட்டன என்றார் அவர்.

மாநில மற்றும் மத்திய அரசின் கூட்டு ஏற்பாட்டிலான இந்த நோன்புப் பொருநாள் பொது உபசரிப்பில் சுமார் 35,000 பேர் கலந்து கொண்டனர். மாநில அரசின் ஜெலாஜா கித்தா சிலாங்கூர் பொது உபசரிப்பின் கடைசி நிகழ்வாகவும் இது அமைந்தது.


Pengarang :