ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

செந்தோசா தொகுதியின் தூய்மை, பசுமை  நிகழ்வில் 500 பேர் பங்கேற்பு

ஷா ஆலம், மே 15- செந்தோசா சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் கிள்ளான், தாமான் தாசேக் பொட்டானிக்கில் நடைபெற்ற தூய்மை மற்றும் பசுமை நடைப்பயண நிகழ்வில் தொகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் நோக்கில் தொகுதி சேவை மையம் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

வட்டார மக்களுக்கும் தலைவர்களுக்குமிடையே அணுக்கமான நட்புறவை ஏற்படுத்துவதிலும் இந்த வருடாந்திர நிகழ்வு பெரும் பங்காற்றுவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் கூறினார்.

இந்த நிகழ்வையொட்டி தாமான் பெட்டானி பூங்கா சுத்தம் செய்யும் இயக்கம், விளையாட்டுப் போட்டிகள், ஜூம்பா, அதிர்ஷ்டக் குலுக்கல், மரம் நடும் இயக்கம் ஆகிய அங்கங்களும் இடம் பெற்றன என்று அவர் தெரிவித்தார்.

நேற்று அனுசரிக்கப்பட்ட அன்னையர் தினத்தை முன்னிட்டு அன்னையர்களை கௌரவிக்கும் விதமாக இந்நிகழ்வில் கேக் வெட்டும் நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என அவர் குறிப்பிட்டார்.

காலை 7.30 மணி தொடங்கி மூன்று மணி நேரத்திற்கு நீடித்த இந்த நிகழ்வில் தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சா ஹூங் ஃபோங்கும் கலந்து கொண்டதாக அவர் சொன்னார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்ட அவர், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அனைவரும் இணைந்து பங்காற்ற முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.


Pengarang :