NATIONAL

போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களின் துஷ்பிரயோகம் தொடர்பான புதிய சட்டம்

காஜாங், மே 20: போதை பொருளுக்கு அடிமையானவர்கள் தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்பின் (எஎடிகே) கீழ் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பெற  அனுமதிக்கும்  போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களின் துஷ்பிரயோகம் தொடர்பான புதிய சட்டம்  வடிவமைக்கப் பட்டுள்ளதாக  எஎடிகே இயக்குனர் சுதெக்னோ அகமட் பெலோன் தெரிவித்தார்..

தற்போது போதைக்கு அடிமையானவர்களின் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு  போதைப்பொருள் தடுப்பு மறுவாழ்வு மையம் (ஏஏடிகெ) யின் அதிகாரத்தின் கீழ் இல்லை என்று அவர் கூறினார்.

“நாங்கள் இப்போது போதைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான அணுகலை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம்,“என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

புதிய சட்டத்தின் மூலம், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் ஏஜென்சியின் கீழ் சிகிச்சை பெற  (ஏஏடிகெ) இல் பட்டியலிடப் படலாம் என்று அவர் தெரிவித்தார்.

போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப் பட்ட பொருட்களை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பான புதிய சட்டத்தை உருவாக்குவதற்கான வரைவு மசோதா இந்த ஜூலை மாதம் அமைச்சரவை கூட்டத்திற்கு கொண்டு வரப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்ததாகக் கடந்த திங்கட்கிழமை பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது

– பெர்னாமா


Pengarang :