ACTIVITIES AND ADSSELANGOR

ஹார்மோனி சமூக இயக்கம் ஏற்பாட்டில் ஆலயத் தலைவர், பொறுப்பாளர்கள் சந்திப்பு கூட்டம்

கோலசிலாங்கூர்  ஜூன் 9, நேற்று முன்தினம் கோலசிலாங்கூர்  தெலுப்பியா பாலாய் ராயாவில் ஆலயப் பொருப்பளர்கள்  சிறப்பு சந்திப்பு கூட்டம் ஒன்று நடைபெற்றது. இச்சந்திப்பு கூட்டத்தில்   இந்து ஆலயங்கள் எதிர்நோக்கும்  பிரச்சினைகள் குறித்து ஆலய தலைவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அது பற்றி ஆராய்ந்து, அதனை எப்படி கையாள  வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கூட்டத்தில் விளக்கமளிக்க பட்டதாக  ஹார்மோனி சமூக இயக்கத்தின் தலைவர் திரு :தேவேந்திரராஜன் கூறினார்.

சுமார் 15 -ஆலயத்தின் தலைவர்கள் அதன் பொருப்பாளர்களும் வருகை தந்திருந்த இச்சந்திப்பு கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் ரீதியில் கூட்டம் அமைந்ததாக அவர் கூறினார்.

இதற்கு வந்திருந்த  சிறப்பு  சிறப்பு வருகையாளர் திரு :தீபன் சுப்ரமணியம் பேசுகையில்  முதலில் இப்பகுதியில் உள்ள ஆலயத் தலைவர்கள்,மற்றும் ஆலயப் பொறுப்பாளர்களுக்கு  வணக்கத்தை கூறிக் கொண்டு  தோட்டப்புறங்களில்  அமைந்துள்ள ஆலயங்கள் நிலைப்பாடு   குறித்து  ஒரு சிலருக்கு அதன் முழு விபரங்களும் இன்னும் தெரியாமல் இருப்பதாக  கூறினார்.

அதே சமயத்தில் அரசாங்கத்திடம்  மனு செய்யும் மானியம் முறையாக கிடைக்க  அல்லது  அப்படி கிடைக்காதவர்கள் எப்படி விண்ணப்பம் செய்யலாம் என்பதை பற்றியும்  விளக்கினார்.

அதோடு மட்டும் அல்லாது ஓர் ஆலயம் புதுப்பிக்க  நாம்  என்ன, எப்படி  செய்ய வேண்டும் என்பதை முறையாக தெரிந்து கொள்ள வேண்டும்.   அப்படி அதன்  கோட்பாடுகளுடன்  செயல்படும் போது  எந்த ஓர் பிரச்சனையும் இல்லாமல் நல்ல முறையில்  முடிவதாக கூறினார்.

இக் கூட்டத்திற்கு வந்தவர்களும் தங்கள் சந்தேகங்களுக்கு  விளக்கம்  பெற்று  திரும்பினர். பி.கே.ஆர்.கட்சியின் கோலசிலாங்கூர் தொகுதி  தலைவர் திரு தீபன் சுப்ரமணியம், கோலசிலாங்கூர் நகராண்மை கழக உறுப்பினர்கள்  திரு. குணசேகரன் சுப்ரமணியம், திரு . சிவபாலன் முகுந்தன்,திருமதி. நந்தகுமாரி சிங்காரம்,  இந்தியர் கிராமத்து தலைவர் திரு . கலைகுமார் ஆறுமுகம் மற்றும் மலேசிய இந்து சங்கம் பத்தாங்  பெர்ஜூந்தாய் வட்டார பேரவை துணைத்தலைவர், தேர்தல் சிறப்புகுழு பொருப்பாளர் திரு  ரவிசந்திரன் ஆதிமூலம்  ஆகியோர்  கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Pengarang :