ACTIVITIES AND ADSMEDIA STATEMENTSELANGOR

“சித்தம்“ ஏற்பாட்டில் நடைபெற்ற சான்றிதழ் மற்றும் தையல் இயந்திரம் வழங்கும் வைபவம்

ஸ்ரீ கெம்பாங்கான், ஜூன் 11- சிலாங்கூர் மாநில  ஆட்சிக்குழு உறுப்பினரும் , ஹிஜ்ரா  எனப்படும்  ஏழ்மை ஒழிப்பு மற்றும் சிறு தொழில்  மேம்பாட்டு  அமைப்பின் தலைவரும்  அம்பாங் தொகுதி நாடாளுமன்ற  உறுப்பினருமான  மாண்புமிகு புவான் ரோட்சியா இஸ்மாயில்  “சித்தம்“ எனப்படும் சிலாங்கூர் இந்திய தொழில் ஆர்வலர் மையத்தின்  சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு 10 தையல் இயந்திரங்களை வழங்கினார்.

சித்தம் மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திறன்  மேம்பாட்டு பயிற்சிகளை நடத்தி வருகிறது. குறைந்த வருமானம் பெறும்  குடும்பங்களை  சேர்ந்தவர்கள் குறிப்பாக மகளிர்  உபரி வருமானம் பெறுவதற்கு உதவும் நோக்கிலான இந்த திட்டங்களை அந்தந்த தொகுதியில் உள்ள இந்திய சமூகத் தலைவர்கள் முன்னின்று  ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக  இன்று ஸ்ரீ கெம்பாங்கான் தாமான் புக்கிட் பிளிம்பிங்கில் உள்ள  சாய் ராணி  பயிற்சி மைய ஒத்துழைப்புடன் 10 மகளிர் 10 வார தையல் பயிற்சி  பெற்று  தேர்ந்தவர்களுக்கு  தகுதி சான்றிதழ்களுடன்.  ஏழை  குடும்ப மகளிர்,  பகுதி நேர வருமானம் பெற உதவியாக தையல் இயந்திரமும்  வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட  சிலாங்கூர்  ஆட்சிக்குழு  உறுப்பினரும்  ஹிஜ்ரா தலைவருமான  மாண்புமிகு புவான் ரோட்சியா இஸ்மாயில்  பயிற்சியை  வெற்றிகரமாக முடித்த  குடும்ப மாது ராஜேஷ் பன்னீர்செல்வத்திடம்  தையல் இயந்திரம்   வழங்குகிறார் , அருகில்  பயிற்சி மைய நடத்துனர்,

Pengarang :