ECONOMYMEDIA STATEMENT

பேரங்காடிகளுக்கு இணையாகப் பொருட்களின் தரம்- மலிவு விற்பனையால் மக்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு

கோல லங்காட், ஜூன் 24- குறைவான விலையில், தரத்தில் பேரங்காடி களுக்கு இணையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் மலிவு விற்பனை பொது மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றதாக, மாநில அரசின் இத் திட்டம் விளங்கி வருகிறது.

மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கிலான ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது முதல் சமையல் பொருட்கள் வாங்குவதற்காக மார்க்கெட் செல்வதை தாம் குறைத்து விட்டதாக லோரி ஓட்டுநரான ஜெப்ரி மாட் ஜூவா (வயது 45) கூறினார்.

எனக்குத் தெரிந்து வரை 30 தடவைக்கும் மேல் இந்த மலிவு விற்பனைக்கு நான் வந்து விட்டேன். மலிவாக இருக்கும் காரணத்தால் கோழி, மீன், முட்டை, இறைச்சி போன்ற உணவுப் பொருட்களை இங்கு வழங்குகிறேன். கொடுக்கும் பணத்திற்கு தகுந்ததாக பொருட்கள் உள்ளன என்றார் அவர்.

இந்த விற்பனை தினமும் நடைபெற்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். வாழ்க்கைச் செலவினம் அதிகரித்துள்ள நிலையில் இந்த திட்டத்தின் மூலம் பணத்தை சேமிக்க முடிகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

பெருநாளை முன்னிட்டு நடத்தப்படும் மெகா விற்பனை ஹாஜ்ஜூப் பெருநாளுக்கான ஏற்பாடுகளைச் செய்வதில் பெரிதும் உதவியாக உள்ளதாக தனியார் நிறுவன பணியாளர் நுருள் ஃபாஸிஹா அப்துல் ரஹிம் (வயது 29) கூறினார்.

சமையல் பொருள்களுக்கான செலவை குறைக்க விரும்புகிறோம். ஆகவே இது போன்ற மலிவு விற்பனை களை நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம். இத்தகைய திட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படும் என எதிர்பார்க்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :