ECONOMYPBT

குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு கனரக வாகனங்களுக்கு சம்மன்

ஷா ஆலம், ஜூன் 30- கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் கோல சிலாங்கூர் வட்டாரத்தில் மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில் இரண்டு டன்னுக்கும் மேற்பட்ட எடை கொண்ட ஏழு லாரிகளுக்கு குற்றப்பதிவுகள் வெளியிட்டது.

குடியிருப்பு பகுதிகள் மற்றும் வர்த்தக வளாகங்களில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களால் சாலைகளுக்கு பாதிப்பு ஏற்படுவது மற்றும் குடியிருப்பாளர்களுக்கு அசௌகர்யம் ஏற்படுவது தொடர்பான புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இடையூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் 2005ஆம் ஆண்டு துணைச் சட்டத்தின் கீழ் அந்த ஏழு லாரிகளுக்கும் குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன என்று நகராண்மைக் கழகம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் கோல சிலாங்கூர் மாவட்ட போக்குவரத்து போலீஸ் துறை, சாலை போக்குவரத்து இலாகாவை உள்ளடக்கிய 14 அதிகாரிகள் பங்கு கொண்டதாக அது குறிப்பிட்டது.


Pengarang :