SELANGOR

பசுமை மற்றும் குறைந்த கார்பன் சுற்றுச்சூழலைக் கொண்டுள்ள வீடுகளின் உரிமையாளர்களுக்கு மதிப்பீட்டு வரியில் தள்ளுபடி

ஷா ஆலம், ஜூலை 6: பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பசுமை மற்றும் குறைந்த கார்பன் சுற்றுச்சூழலைக் கொண்டுள்ள வீடுகளின் உரிமையாளர்களுக்கு 2023 மதிப்பீட்டு வரி தள்ளுபடி திட்டத்திற்கான விண்ணப்ப காலத்தைப் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (எம்பிபிஜே)  நீட்டித்துள்ளது.

ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டம் ஜூலை 31 வரை நீட்டிக்கப்படும் என்று பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (எம்பிபிஜே) முகநூலில் தெரிவித்துள்ளது.

“இந்த திட்டம் பெட்டாலிங் ஜெயாவைக் குறைந்த கார்பன் மற்றும் பசுமை நகரமாக மாற்றுவதற்குக் குடியிருப்பாளர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

“நீர், பல்லுயிர், கழிவு, போக்குவரத்து மற்றும் ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் பசுமையான மற்றும் நிலையான வாழ்க்கை முறையை கடைப் பிடிக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது“.

மேலும், இத் திட்டத்தில் மூலம் ஆண்டு மதிப்பீட்டு வரியில் அதிக பட்சமாக 100 சதவீதம் அல்லது RM500 வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஆர்வம் உள்ளவர்கள் www.mbpj.gov.my என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேல் விசாரணைகளுக்குப் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது தூய்மை துறையை 03-7954 1440 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :