ECONOMYMEDIA STATEMENT

 சாலைகள், அடிப்படை வசதிகளை மேம்படுத்த கின்றாரா தொகுதி 2018 முதல் வெ.40 லட்சம் செலவிட்டது

சுபாங் ஜெயா, ஜூலை 8- கின்றாரா  சட்டமன்றத் தொகுதி  கடந்த  2018 ஆம் ஆண்டு முதல் 40 லட்சம் வெள்ளி செலவில்  27 க்கும் மேற்பட்ட அடிப்படை வசதித் திட்டங்களை மேற்கொண்டுள்ளது.

பண்டார் கின்றாரா 5 (பி.கே.5) முதல் தாமான்  புஞ்சா கின்றாரா வரை  வரை புதிய சாலையை உருவாக்குவது உட்பட சாலை மேம்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்தப் பட்டுள்ளதாக கின்ராரா  மாநில சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான்  கூறினார்.

நாங்கள் 400,000 வெள்ளி செலவில் ஜாலான் பிபிட் சாலைச் சந்திப்பை மேம்படுத்தியுள்ளோம், இதன் வழி 30,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் மற்றும் சாலைப் பயனாளர்களுக்கு பயனளிக்கிறது என்று அவர் தெரிவித்தார்

சாலை கட்டுமானத் திட்டம் (மிஸ்ஸிங் லிங்க் TPK-BK5) 28 லட்சம் வெள்ளி  செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டம்  இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

தற்போது  அதிகரித்து வரும் பூச்சோங்கின் போக்குவரத்து நெரிசல் பிரச்சனையை விரைவாகச் சமாளிப்பதை உறுதிசெய்ய இந்த முயற்சி எடுக்கப்பட்டதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

மேலும்,180,000 வெள்ளி செலவில் தாமான் புஞ்சா கின்றாரா  என்ற இடத்தில் கூடைப்பந்து மைதானம் நாங்கள் கட்டியுள்ளோம். மேலும், தாமான் பெலுத்தோக்கில் 69,500 வெள்ளி செலவில் கூடைப்பந்து மைதானம், மெதுவோட்டம் தடம்  மற்றும் விளையாட்டு மைதான வசதிகளை ஏற்படுத்தினோம். இவை தவிர, தாமான் தெம்புவாவில்  20,000 வெள்ளி செலவில் சோலார் விளக்குகளை நிறுவினோம் என அவர் குறிப்பிட்டார்.

இவற்றுடன், 38,000 வெள்ளி  செலவில் ஜாலான் கெனாரியில்  நடைபாதையும் டி.கே.கே. ஏ பிரிவு அடுக்குமாடி அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மெலோர் அடுக்குமாடி குடியிருப்பில் 78,000  வெள்ளி செலவில் மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடத்தையும் தாமான் டெம்புவாவில் வெ.60,000 செலவில் சிறுவர் விளையாட்டு மைதானத்தையும் நிர்மாணித்துள்ளோம் என்றார் அவர்.


Pengarang :