ECONOMYMEDIA STATEMENTSELANGOR

லெம்பா பெர்மாய் கிராமத்தில்  வாடகைக்கு குடியிருந்த 49  குடும்பங்களுக்கு  சொந்த வீடு பெற வாய்ப்பு

அம்பாங் ஜெயா, ஜூலை 6: லெம்பா பெர்மாய் கிராமத்தில் அரசாங்க  வீடுகளில் தற்காலிகமாக வாடகைக்கு குடியிருந்த 49  குடும்பங்களுக்கு  சொந்த வீடு பெற வாய்ப்பு வழங்கப்பட்டது.

அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சிலுக்கு (எம்பிஏஜே) சொந்தமான லெம்பா பெர்மாய் வீடுகளில் தற்காலிகக்  குடியேற்றத்தின் கீழ் மொத்தம் 49 வாடகை குடியிருப்பாளர்கள்  அம்பாங் ஜெயா ஊராட்சி மன்றத்தின் ஒப்புதலுடன்  RM 42,000   வெள்ளி  அசல்  விலையில்  வீடுகள் வழங்கப்படும்.

2008 ம் ஆண்டு முதல்  குடியிருக்கும் அவர்களுக்கு அந்த வீடுகளை  வழங்க  அரசாங்கம் ஒப்புக்கொண்டதால்,  அவர்கள் அக் குடியிருப்பை சொந்தமாக  பெற வாய்ப்பு  ஏற்பட்டுள்ளது.

அந்த வீடுகள் ஒவ்வொன்றும்  650 சதுர அடிகளைக் கொண்டது. அதன்  சந்தை விலை ஒரு யூனிட் RM 160,000  பெறுமானது.  ஆனால் மாநிலத்தில்  உள்ள அனைவரும்  சொந்த வீடுகள் பெற வேண்டும் என்பது, மாநில  அரசின் கொள்கை. மேலும்  வாடகையின் வழி மிக வறிய நிலையில் உள்ளவர்களுக்கு  வீடுகள் உரிமையாக்கும் திட்டத்தையும் மாநில அரசு கொண்டுள்ளது.

அவர்கள்  குடியிருந்த இடத்தில் இருந்து  வெளியேற்றப்பட்ட நேரத்தில் அவ் வீடுகளின் விலை  மற்றும்  குடியேறியவர்களின்  குடும்ப சூழ்நிலைகள்  அனைத்தையும் கருத்தில் கொண்டு  இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மாநில வீடமைப்பு துறைக்கு பொறுப்பானவரும், மாநில முன்னால் ஆட்சிக் குழு உறுப்பினருமான  புவான் ரோட்சியா இஸ்மாயில்  கூறினார்.


Pengarang :